TV கதை காலி.. 100 இன்ச் ப்ரொஜெக்டர்.. 4K UHD வீடியோ.. டால்பி அட்மோஸ்.. 3000 ANSI லூமென்ஸ்.. எந்த மாடல்?
100 இன்ச் டிவி மாடல்களை தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்களுடன் பென்கியூ டிகே705ஐ (BenQ TK705i) மற்றும் பென்கியூ டிகே70எஸ்டிஐ (BenQ TK705STi) ப்ரொஜெக்டர் மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. 4K UHD ரெசொலூஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 3000 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் மட்டுமல்லாமல், கூகுள் டிவி ஓஎஸ், 2டி கீஸ்டோன் போன்ற அம்சங்களை கொடுக்கிறது. இந்த பிரீமியம் ப்ரொஜெக்டர் மாடல்களின் விவரங்களை பார்க்கலாம்.
பிரீமியம் ஹோம் தியேட்டர் அனுபவம் கொடுக்கும்படியான ப்ரொஜெக்டரை தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த பென்கியூ மாடல்கள் சரியாக இருக்கும். அதேபோல விலையும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கும். சொல்லப்போனால், 100 இன்ச் ஓடிஎல்இடி டிவியைவிட விலை அதிகமாக இருக்கிறது. முதலில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம்.

பென்கியூ டிகே705ஐ அம்சங்கள் (BenQ TK705i Specifications): 100 இன்ச் ப்ரொஜெக்சன் மட்டுமல்லாமல், 3840 x 2160 பிக்சல்களுடன் 4K அல்ட்ராஎச்டி (UHD) ரெசொலூஷன் கொடுக்கிறது. 3000 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) கிடைக்கிறது. 1.8 மீட்டர்களில் 100 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கும். பிரீமியம் மாடலாக இருப்பதால் ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்டுள்ளது.
ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கிடைக்கிறது. மேலும், ஸ்கிரீன் ஃபிட் (Screen Fit), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கிடைக்கிறது. முக்கியமாக ஐ புரொடெக்சன் (Eye Protection) கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மட்டுமல்லாமல், எச்டிஆர் ப்ரோ (HDR PRO) மற்றும் சினிமாடிக்கலர் (CinematicColor) கலர் கிடைக்கிறது.
மேலும், ஆர்பிஜி (RPG) மற்றும் எப்பிஎஸ் (FPS) என்ஹான்ஸ்மெண்ட் கொண்ட கேமிங் மோட் (Gaming Mode) கிடைக்கிறது. இதுபோக 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, ஓஎல்இடி டிவிக்கு நிகரான கலர் அக்கியூரசி மற்றும் நேச்சுரல் அனுபம் இதில் எதிர்பார்க்கலாம். இதுவொரு டிஎல்பி (DLP) ப்ரொஜெக்சன் கொண்ட மாடலாகும். எல்இடி லைட் சோர்ஸ் உள்ளது.
நார்மல் யூசேஜில் 20 ஆயிரம் மணி நேரங்களுக்கு லேம்ப் லைப் கிடைக்கும். எகோ மோடில் 30 ஆயிரம் மணி நேரங்களுக்கு லேம்ப் லைவ் எதிர்பார்க்கலாம். 2D கீஸ்டோன் கொண்ட மாடலாக இருக்கிறது. 5 எம்எஸ் லேக் ப்ரீ அவுட்புட் கொடுக்கும். ஏஎல்எல்எம் (ALLM) கிடைக்கிறது. எச்டிஎம்ஐ 2.1 வழிகாய ஈஏஆர்சி (eARC) சப்போர்ட் கிடைக்கிறது.
8W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. ஆகவே, 16W அவுட்புட் கிடைக்கும். மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 11 சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிளோ ஸ்டோரில் கிடைக்கும் ஓடிடி, கேமிங் உள்பட ஒட்டுமொத்த ஆப்களையும் பயன்படுத்தலாம்.
பிரீமியம் டிவிகளில் கிடைக்கும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஆப்பிள் ஏர்பிளே (AirPlay) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது. போர்ட்களை பொறுத்தவரையில், 2 எச்டிஎம்ஐ 2.1 போர்ட்கள், யுஎஸ்பி-ஏ போர்ட், யுஎஸ்பி-சி போர்ட் மற்றும் டிசி 12V டிரிக்கர் கிடைக்கிறது. 1.3X மோட்டரைஸ்டு ஜூமிங் கொடுக்கப்படுகிறது.
இதில் கிடைக்கும் ஒட்டுமொத்த பீச்சர்களும் பென்கியூ டிகே70எஸ்டிஐ மாடலிலும் கிடைக்கிறது. ஆனால், இதில் மோட்டரைஸ்டு ஜூமிங் கிடையாது, பிக்சடு ஜூமிங் மட்டுமே கிடைக்கிறது. பென்கியூ டிகே705ஐ மாடலின் விலை ரூ.1,99,990ஆகவும், பென்கியூ டிகே70எஸ்டிஐ மாடலின் விலை ரூ.2,25,000ஆகவும் இருக்கிறது. பென்கியூ தளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








