BenQ அறிமுகம் செய்த புதிய 4கே ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. கூகுள் டிவி.. எந்த மாடல்? என்ன விலை?
பென்கியூ (BenQ) நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய 4கே ப்ரொஜெக்டர் மாடலை ஒன்றை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.
அதாவது பென்கியூ நிறுவனம் தற்போது பென்கியூ டிஎச்575ஐ (BenQ TH575i) ப்ரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பென்கியூ டிஎச்575ஐ அம்சங்கள் (BenQ TH575i projector Specifications): 4K ரெசல்யூஷன் மற்றும் நேட்டிவ் 1080p ரெசல்யூஷன் ஆதரவுடன் இந்த பென்கியூ டிஎச்575ஐ ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் 15,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (15,000:1 contrast ratio) மற்றும் 1.7 பில்லியன் கலர்ஸ்(1.07 billion colours) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய பென்கியூ மாடல்.
அதேபோல் பென்கியூ டிஎச்575ஐ மாடல் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 150 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது இந்த பென்கியூ ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ வெர்டிகல் கீஸ்டோன் (auto vertical keystone) ஆதரவும் இதில் உள்ளது.

3,800 ANSI லுமென்ஸ் பிரைட்னஸ் (3,800 ANSI lumens of brightness) வசதியுடன் புதிய பென்கியூ டிஎச்575ஐ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate)மற்றும் 1.1x ஜூம் (1.1x zoom) வசதியும் இந்த புதிய சாதனத்தில் உள்ளது. அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பென்கியூ நிறுவனம்.
மேலும், இது தனிப்பட்ட Sports Mode-ஐ கொண்டுள்ளது. இது skin tones மற்றும் மைதானத்தின் நிறங்களையும் மேம்படுத்தி, போட்டிகளை இயற்கைக்கு நெருக்கமான காட்சித் தரத்துடன் ரசிக்க உதவுகிறது. திரைப்படங்களுக்காக சிறப்பான கான்ட்ராஸ்ட் மற்றும் துல்லியமான வண்ணங்களை வழங்கும் Cinema Mode, முப்பரிமாண பொழுதுபோக்கு அனுபவத்திற்கான 3D Mode, மேலும் சிறந்த கேமிங் அனுபவத்திற்காக காட்சித் தெளிவையும் பதிலளிக்கும் வேகத்தையும் மேம்படுத்தும் Game Mode ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ப்ரொஜெக்டர் உடன் நெட்பிளிக்ஸ் ஆதரவுடன் கூடிய கூகுள் டிவி டாங்கிள் வருகிறது. இதன் மூலம், கூடுதல் ஸ்ட்ரீமிங் சாதனம் எதுவும் தேவையில்லாமல், Netflix, YouTube, Disney+ உள்ளிட்ட பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளை பயனர்கள் நேரடியாக பயன்படுத்த முடியும்.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆரவுகள் இந்த மாடலில் உள்ளன. ஆகவே இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.15,000 மணிநேரம் வரை லேசர் லைட் சோர்ஸ் லைஃப் (laser light source life) மற்றும் 10W ஸ்பீக்கர்கள் ஆதரவும் இதில் உள்ளன.
பென்கியூ டிஎச்575ஐ மாடல் ரூ.56,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பென்கியூ இணையதளத்தில் இந்த புதிய சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications