Home
Gadgets

வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர்.. 120 இன்ச்.. கூகுள் டிவி OS.. BenQ புரொஜெக்டர் அறிமுகம்.. என்ன விலை?

பென்கியூ (BenQ) நிறுவனம் இந்தியாவில் பென்கியூ ஜிவி50 எனும் புரொஜெக்டர் (BenQ GV50 projector) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு ஃபுல் எச்டி லேசர் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் சினிமாடிக்சவுண்ட், டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், ஆட்டோ 2D கீஸ்டோன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த பென்கியூ புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பென்கியூ ஜிவி50 புரொஜெக்டர் அம்சங்கள் (BenQ GV50 projector Specifications): 135-டிகிரி வெர்டிகல் புரோஜெக்சன் (135-degree vertical projection) வழங்குகிறது இந்த புதிய பென்கியூ ப்ரொஜெக்டர். இது ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் இதில் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச், 75 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே கிடையாது.

வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர்.. 120 இன்ச்.. என்ன விலை?

அதாவது இந்த புதிய புரொஜெக்டரில் 120 இன்ச் வரையில் புல் எச்டி ஆதரவு கொண்ட வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். குறிப்பாக 500 ஏஎன்எஸ்ஐ லுமன்ஸ் ப்ரைட்னஸ் (500 ANSI lumens brightness), எச்டிஆர் 10 பிளஸ், எச்எல்ஜி (HLG), 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (16:9 aspect ratio), சினிமாடிக்கலர் (CinematicColor), சினிமாடிக்சவுண்ட் உளிட்ட பல சிறப்பு அம்சங்கள் பென்கியூ ஜிவி50 மாடலில் உள்ளன. ஆகவே தியோட்டர் லெவல் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

அதேபோல் 30000 மணிநேரம் வரை லேசர் லைட் சோர்ஸ் லைஃப் (laser light source life) உடன் இந்த புதிய பென்கியூ புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள இன்டெக்ரேடட் பேட்டரி (integrated battery) 150 நிமிட வீடியோ பிளே டைம் அல்லது 280 நிமிட ப்ளூடூத் மியூசிக் பிளேபேக்கை வழங்குகிறது.

ஆட்டோ-ஃபோகஸ் (auto-focus), ஆட்டோ 2D கீஸ்டோன் கரெக்ஷன் (auto 2D keystone correction), அப்ஸ்டகிள்ஸ் அவாய்டன்ஸ் (Obstacles Avoidance) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய பென்கியூ ஜிவி50 புரொஜெக்டர் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பென்கியூ நிறுவனம்.

டால்பி ஆடியோ (Dolby Audio) உடன் கூடிய 18W 2.1 சேனல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான பென்கியூ ஜிவி50 மாடல். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் டிஸ்ப்ளே போர்ட் அவுட்பட், யுஎஸ்பி டைப்-சி டேட்டா டிரான்ஸ்மிஷன் (USB-C data transmission), நிண்டெண்டோ ஸ்விட்ச் (Nintendo Switch) போன்ற ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளது.

ஓம்னிடைரக்ஷனல் ஆங்கிள் சப்போர்ட் (omnidirectional angle support), டூ-ஸ்டேஜ் டில்ட் புரோஜெக்சன் ( two-stage tilt projection), டிஜிட்டல் ஜூம் மற்றும் டிஜிட்டல் H/V லென்ஸ் ஷிஃப்ட் (digital H/V lens shift) போன்ற மேம்பட்ட புதிய அம்சங்களுடன் இந்த பென்கியூ ஜிவி50 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது.

வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர்.. 120 இன்ச்.. என்ன விலை?

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த பென்கியூ ப்ரொஜெக்டர் இயங்குகிறது. பின்பு பல்வேறு கேமிங் அம்சங்களும் உள்ளன. அதேபோல் பல்வேறு ஓடிடி (OTT) தளங்களை இதில் பயன்படுத்த முடியும். உங்கள் போனில் ஸ்மார்ட் ரிமோட் ஆப் மூலம் பென்கியூ ஜிவி50 மாடலை இயக்கலாம் என நிறுவனம் கூறியுள்ளது.

பென்கியூ ஜிவி50 புரொஜெக்டர் விலை ரூ.69,990-ஆக உள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி அமேசான் மற்றும் பென்க்யூ இ-ஸ்டோர் வழியாக இந்த புதிய புரொஜெக்டர் விற்பனைக்கு வரும். தற்போது இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BenQ GV50 projector launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X