Home
Gadgets

இனி 100-இன்ச் டிவி எதுக்கு? கீஸ்டோன் கரெக்சன்.. கூகுள் டிவி.. 120-இன்ச்.. புது BenQ ப்ரொஜெக்டர் அறிமுகம்..

பென்கியூ நிறுவனம் தனது புதிய பென்கியூ ஜிவி32 போர்ட்டபிள் சீலிங் ப்ரொஜெக்டர் (BenQ GV32 portable ceiling projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கூகுள் டிவி, எச்டிஆர் 10, 18W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பென்கியூ ஜிவி32 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (BenQ GV32 projector Specifications): பென்கியூ ஜிவி50 மாடல் போலவே சுழலும் அடித்தளத்தைப் பயன்படுத்துகிறது பென்கியூ ஜிவி32 போர்ட்டபிள் சீலிங் ப்ரொஜெக்டர். மேலும் இது 135-டிகிரி வெர்டிக்கல் டில்ட்(vertical tilt) ஃபுல் 360-டிகிரி ஹரிசாண்டல் ரோட்டேஷன் (horizontal rotation) வழங்குவதால், எந்த நிலையிலிருந்தும் சுவர்கள் அல்லது கூரைகளில் எளிதாக திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும்.

இனி 100-இன்ச் டிவி எதுக்கு? புது BenQ ப்ரொஜெக்டர் அறிமுகம்..

பென்கியூ ஜிவி32 போர்ட்டபிள் சீலிங் ப்ரொஜெக்டர் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டோபோகஸ் (autofocus), 2டி கீஸ்டோன் கரெக்சன் (2D keystone correction), ஆட்டோ இமேஜ் ரோட்டேஷன் (auto image rotation), டிஜிட்டல் ஜூம் (digital zoom) போன்ற அசத்தலான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த அம்சங்கள் மூலம் மிகவும் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

500 ஏஎன்எஸ்ஐ லுமன்ஸ் ப்ரைட்னஸ் (500 ANSI lumens brightness) ஆதரவை வழங்குகிறது இந்த புதிய பென்கியூ ப்ரொஜெக்டர் மாடல். மேலும் 100,000:1 கான்ட்ராஸ்ட் கான்ட்ராஸ்ட் ரேசியோ, எச்டிஆர் 10 (HDR10), எச்எல்ஜி (HLG) போன்ற அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன. அதேபோல் இந்த ப்ரொஜெக்டரில் உள்ள சினிமாடிக் கலர் தொழில்நுட்பமும் (CinematicColor Technology) உள்ளது.

இனி 100-இன்ச் டிவி எதுக்கு? புது BenQ ப்ரொஜெக்டர் அறிமுகம்..

ஆடியோவைப் பொறுத்தவரை இரண்டு 4W டிரைவர்கள் (drivers) மற்றும் ஒரு 10W வூஃபர் (woofer) அடங்கிய 2.1 சேனல் அமைப்பு உள்ளதால், தெளிவான மற்றும் முழுமையான ஆடியோ அனுபவத்தை பெறமுடியும். கூகுள் டிவி (Google TV) சார்ந்த ஆண்ட்ராய்டு 11 மூலம் இந்த பென்கியூ ஜிவி32 மாடல் இயங்குகிறது.

இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடல் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி+ போன்ற 10,000-க்கும் மேற்பட்ட ஆப் பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. கூகுள் காஸ்ட் (Google Cast), ஏர்பிளே (AirPlay), ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த ப்ரொஜெக்டரில் உள்ளன. இதனால் பல்வேறு சாதனங்களுடன் எளிதாக இணைக்க முடியும்.

புதிய ப்ரொஜெக்டர் பென்கியூ மாடலை SmartRemote செயலி மூலம் பிரைட்னஸ், கீஸ்டோன் மற்றும் பிற பயன்பாட்டு செயல்பாடுகளை நேரடியாக தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே கட்டுப்படுத்தலாம். இதற்காக தனியாக ஒரு ரிமோட்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் இந்த ப்ரொஜெக்டரில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவையும் வழங்குகிறத. மேலும் இது சார்ஜ் செய்யக்கூடியது மற்றும் 60W அல்லது அதற்கு மேற்பட்ட USB-C பவர் பேங்குகளால் இயக்க முடியும்.

இனி 100-இன்ச் டிவி எதுக்கு? புது BenQ ப்ரொஜெக்டர் அறிமுகம்..

பென்கியூ ஜிவி32 மாடலில் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த பென்கியூ புரொஜெக்டர். மேலும் இந்த சாதனத்தின் எடை 1.6 கிலோ ஆகும்.

தற்போது பென்கியூ ஜிவி32 போர்ட்டபிள் சீலிங் ப்ரொஜெக்டர் மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலின் விலை $599 (இந்திய மதிப்பில் ரூ.53,152) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BenQ GV32 portable ceiling projector launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X