ரூ.1,999/-க்கு 10 ஜிபிபிஎஸ் ட்ரான்ஸ்பர் ஸ்பீட் வழங்கும் மிக்ஸ்இட் டூராடெக் யூஎஸ்பி-சி.!

|

மொபைல் பாகங்களை உருவாக்கும் பிராண்ட் ஆன பெல்கின் நிறுவனம் அதன் மிக்ஸ்இட் டூராடெக் (MIXIT DuraTek) கேபிள்களின் வரிசையில் அதன் புதிய மிக்ஸ்இட் டூராடெக் யூஎஸ்பி-சி என்றவொரு புதிய உறுப்பினரை சேர்த்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், அமேசான்.காம் மற்றும் இமேஜின் ஸ்டோர்களில் ரூ.1,999/-க்கு இந்த கேபிள் கிடைக்கிறது.

10 ஜிபிபிஎஸ் ட்ரான்ஸ்பர் ஸ்பீட் வழங்கும் மிக்ஸ்இட் டூராடெக் யூஎஸ்பி-சி

4-அடி நீண்ட யுஎஸ்பி கேபிள் ஆன இது கேவ்லார் ஃபைபர் கொண்டிருக்கும் கடத்திகள் மூலம் வலுவூட்டப்பட்டிருக்கிறது, இது கூடுதலான ஆயுளை வழங்கும் மற்றும் சேதத்திலிருந்து கம்பிகளை பாதுகாக்கின்றன. அவை நீண்ட, நெகிழ்வான, மற்றும் ஸ்ட்ரெயின்-ரிலீஃப் ஆகிய அழுத்தத்தை வளைவதின் மூலம் சரிக்கட்டுகின்றன.

இரட்டை சடை நைலான் வடிவங்கள் ஒரு நீடித்த, நெகிழ்வான கேபிள் ஜாக்கெட் கொண்டுள்ளது. சார்ஜிங் மற்றும் பவர் சார்ந்த விடயங்களுக்கு வரும்போது யூஎஸ்பி-சி கேபிள்கள் ஒரு யூஎஸ்பி- சி ஆதரவு சாதனதத்தை 3 ஏஎம்பிஎஸ் வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.

யூஎஸ்பி-சி 3.1 கேபிள் மூலம் சாதனங்களை 100 வாட் வரை சார்ஜ் செய்ய பயன்படுத்த முடியும். அதோடு, சரியான மின் விநியோகம் மற்றும் ஒரு பாதுகாப்பான கட்டணத்தை உறுதி செய்வதற்கு இதனுள் ஒரு உள்ளக மின் மேலாண்மை சிப் கேபிள்கள் உள்ளன.

10 ஜிபிபிஎஸ் ட்ரான்ஸ்பர் ஸ்பீட் வழங்கும் மிக்ஸ்இட் டூராடெக் யூஎஸ்பி-சி

புதிய யூஎஸ்பி 3.1 சூப்பர்ஸ்பீட் ​​+ யூஎஸ்பி 2.0 (480 எம்பிபிஎஸ்) ஆகியவைகளை விட 20 மடங்கு வேகமாகவும், ஃபயர்வேரை விட 12 மடங்கு வேகமாகவும், 10 ஜிபிபிஎஸ் வரை தரமான இடமாற்றத்தை இது வழங்குகிறது. இது 30 நொடிகளில் ஒரு முழு எச்டி திரைப்படத்தையும் டிரான்ஸ்பர் செய்ய வல்லது என்று நிறுவனம் கூறுகிறது.

மேலும் இந்த யூஎஸ்பி 3.1 கேபிள்கள் உங்கள் லேப்டாப், தொலைபேசி அல்லது டேப்டாப்பிலிருந்து உங்கள் எச்டிடிவி அல்லது மானிட்டருக்கு 4கே (அல்ட்ராஹெச்இடி) வீடியோ மற்றும் ஆடியோவையும் வழங்கும். தவறான முறையில் இந்த கேபிளை பொருத்தி விடுவோமோ என்ற கவலை வேண்டாம், எந்த திசையிலும் உங்கள் சாதனம் செருகக்கூடிய முடியும் வண்ணம் ஒரு தலைகீழ் வடிவமைப்பை இந்த கேபிள் கொண்டுள்ளது.

10 ஜிபிபிஎஸ் ட்ரான்ஸ்பர் ஸ்பீட் வழங்கும் மிக்ஸ்இட் டூராடெக் யூஎஸ்பி-சி

"நாங்கள் எங்கள் டூராடெக் கேபிள்களை மிகவும் வலுவாக உருவாக்கியுள்ளோம், ஏனென்றால் சாதாரண கேபிள்கள் சவால்களை சமாளிக்கும் போது கடுமையானதாக இல்லை என்பதை அறிவோம் "என்று ஆலிவர் சீல், பெல்கின் துணைத் தலைவர் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Belkin MIXIT DuraTek USB-C with up to 10Gbps transfer speed launched at Rs 1,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X