ஆப்பிள் நிறுவனத்தின் பவர்பீட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.!
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இந்நிறுவனம் பீட்ஸ் பிரிவு பவர்பீட்ஸ் ப்ரோ எனும் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு ஏர்பாட்ஸ் 2 என சாதனத்தை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்சமயம் அசத்தலான பவர்பீட்ஸ் ப்ரோ என்ற சாதனத்ததை அறிமுகம் செய்துள்ளது
இந்த பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்றும், பின்புஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமாகும் முன் பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் புகைப்படங்கள் ஐ.ஓ.எஸ். 12.2 இயங்குதளத்தில் லீக் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறவனத்தின் பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.17,000-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விற்பனை விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும இதன் சர்வதேச வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. குறிப்பாக பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஐவரி, பிளாக், மோஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய பவர்பீட்ஸ் ப்ரோ
இயர்பட்ஸ் சிறப்பான ஆடியோ தரம், நாய்ஸ் ஐசோலேஷன் மற்றும் கிளாஸ் 1 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்குகிறது.

மேலும் பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஆப்பிளின் ஹெச்.1 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இத்துடன் ஹே சிரி வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய பவர்பீட்ஸ் ப்ரோ கேஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கவில்லை என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications