மறுபடியும் வந்துட்டான் ONIDA கொம்பன்.. Dolby ஆடியோ உடன் 55-இன்ச் TV.. ரூ.12000 விலை குறைப்பில் விற்பனை!
ஒனிடா (ONIDA) நிறுவனம் - ஒரு காலத்தில் ஒட்டுமொத்த டிவி சந்தையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து கொண்டிருந்த நிறுவனம் ஆகும். இன்றும் கூட இந்நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதிலொரு மாடல், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
அது ஒனிடா 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Onida 55-inch Ultra HD 4K Smart LED Fire TV - 55UFD) மாடல் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், 29% நேரடி தள்ளுபடியை பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.43,390 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது ரூ.12,000 க்கும் மேலான நேரடி தள்ளுபடி ஆகும். அதாவது இந்த விலைக்கு வாங்க நீங்கள் கூடுதலாக எந்தவொரு வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் இல்லாமலேயே நேரடியாக கிடைக்கும் டிஸ்கவுண்ட் ஆகும். ஒருவேளை நீங்கள் கூடுதல் சலுகைகளை தேடினால் அதுவும் கிடைக்கிறது.
கூடுதலாக கிடைக்கும் சலுகைகள்:
- அமேசான் பே பேலன்ஸ் (Amazon Pay Balance) வழியாக பணம் செலுத்தினால் ரூ.929 வரை கேஷ்பேக் கிடைக்கும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை (Bank Credit Card) பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.1549 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
ஒனிடா 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன்
- 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- இன்டெலிஜெண்ட் எச்டிஆர் (Intelligent HDR)
- 178 டிகிரி வியூவிங் ஆங்கிள்
- ட்ரூ பெசஸ்-லெஸ் (True-Bezel-less) வடிவமைப்பு
- ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimization)
- பில்ட்-இன் டூயல் பேண்ட் வைஃபை (Dual Band Wi-Fi)
- செட்-டாப் பாக்ஸ் மற்றும் கேமிங் கன்சோல்களை இணைக்க 3 HDMI போர்ட்கள்
- ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற யுஎஸ்பி டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்
- ARC, ப்ளூடூத் இணைப்பு (வி5.0), ஈதர்நெட் (Ethernet) மற்றும் 3.5mm இயர்போன் ஜாக்
- 20வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
- டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு
- பில்ட்-இன் ஃபையர் டிவி (Fire TV)
- Prime Video, Netflix, Disney+ Hotstar, YouTube போன்ற ஆப்ஸ்
- ஆப் ஸ்டோரில் 18,000-க்கும் மேற்பட்ட ஆப்கள்
- அலெக்ஸ்சா (Alexa) வசதியுடன் கூடிய வாய்ஸ் ரிமோட்
- குவாட்-கோர் ARM Cortex-A55 சிபியு
- டிடிஎச் (DTH) சேனல்கள் மற்றும் ஓடிடி (OTT) ஆப் செயலிகளுக்கு இடையே ஹோம் ஸ்க்ரீனில் இருந்தே மாற டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் ஒருங்கிணைப்பு
- 2ஜிபி ரேம் + 16GB இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal Storage)
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட பிராண்ட் உத்தரவாதம்.
ஒருவேளை நீங்கள் இதை விட இன்னும் மலிவான அல்லது இன்னும் சிறிய டிஸ்பிளே கொண்ட ஒனிடா ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க விரும்பினால், மேற்கண்ட அம்சங்களை அப்படியே வழங்கும் 43-இன்ச் மாடலை வாங்கலாம். அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இது அதன் அசல் விலையான ரூ.33,190 க்கு பதிலாக, 34% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications