Just In
- 9 min ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 9 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 13 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- News
"திவாலாகும் பாகிஸ்தான்?" சுற்றி சுழன்றடிக்கும் சிக்கல்கள்! தயங்கும் உலக நாடுகள்! என்ன தான் நடக்கிறது
- Finance
'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா? அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்!
புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூங்க வைப்பது என்பது உலகிலேயே மிகவும் கடினமான ஒரு செயலாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் பெற்றோர்கள் இரவு முழுதும் உறங்காமல் சிரமப்படுவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். நம்மில் சிலர் இதைத் தினமும் அனுபவித்தும் இருப்போம். இனி அந்த கவலை வேண்டாம் குழந்தையைத் தூங்க வைக்கும் ரோபோட் ரெடி ஆகிவிட்டது.

க்ராடில்வைஸ் கிரிப் ரோபோட்
சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட க்ராடில்வைஸ் (Cradlewise) என்ற நிறுவனம் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இனி எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்க உதவும் வகையில் புதிய கிரிப்-ஐ (crib) உருவாக்கியுள்ளது. அதாவது புதிய ரோபோட் தொட்டிலை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இனி உன்னால் குழந்தை ஆழ்ந்து தூங்குவதற்கு நீங்கள் சிரமப்படவேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் இந்த ரோபோட் பார்த்துக்கொள்ளும்.

குழந்தைகளை தூங்க வைக்க ஸ்மார்ட் ரோபோட்
எந்தவொரு மனித அல்லது பெற்றோர் தலையீடும் இல்லாமல், குழந்தையைத் தூக்க வைக்க இந்த மேம்படுத்தப்பட்ட ரோபோ ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் குழந்தையிடம் கணிக்க முடியாத சில விஷயங்களைக் கூட இந்த ரோபோட் மிகத் துல்லியமாகக் கண்காணித்துக் கணித்துவிடுகிறது. உங்கள் குழந்தையின் தூங்கும் பழக்கத்தைப் பற்றிய தகவலையும் உங்களுக்குத் தெரிவித்துவிடுகிறது.

குழந்தையின் தூங்கும் பழக்கத்தை கண்காணிக்கும் AI
மோஷன் சென்சார்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் குழந்தை அழும்போதும், எழுந்திருக்கும்போதும் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியும் AI உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இந்த தொட்டிலில் உள்ளது. குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்திருக்கப் போகிறது என்பதை சென்சார்கள் உணர்ந்துவிட்டால், தொட்டிலில் உள்ள மென்மையான வைப்ரேட்டார் தொட்டிலை ஆட்டுவது போன்று செய்து குழந்தையை மீண்டும் துங்கத்திற்குக் கொண்டுசெல்கிறது.

இனி பெற்றோரும் நிம்மதியாக உறங்கலாம்
இப்படி குழந்தையைத் தூங்க வைப்பது மட்டுமின்றி குழந்தை தூங்கும் கால அட்டவணையின் சுயவிவரத்தை உருவாக்கி, குழந்தைக்கு மிகவும் பொருத்தமான இயக்கத்தை இந்த AI தானாக அமைத்துக்கொள்கிறது. இந்த தகவலைப் பெற்றோருக்கும் ஆப்ஸ் மூலம் தெரியப்படுத்துகிறது. இதில் உள்ள மென்மையான வைப்ரேட்டார் சத்தமில்லாமல் இயங்குகிறது. இந்த தொட்டிலில் சிறிய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையைப் பெற்றோர் கண்காணித்துக்கொள்ளலாம்.

இயற்கையான பொருட்களால் ஆன தொட்டில்
இந்த தொட்டில் முற்றிலுமாக குழந்தைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பதனால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்இயற்கையான பொருட்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. தேங்காய் நார் மற்றும் ஆர்கானிக் காம்பௌண்ட்களை கொண்டு தான் இந்த தொட்டில் ஆரோக்கியமான பாதுகாப்பதுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தொட்டிலில் உள்ள விளிம்புகளை குழந்தையின் பாதுகாப்பிற்கு ஏற்றார் போல உயர்த்தவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ முடியும்.

கேமரா மற்றும் ஸ்பீக்கர் கூட உண்டு! விலை என்ன?
அதேபோல், இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் குழந்தைகளின் உறக்கத்திற்குத் தேவையான வைட் நாய்ஸ் ஆடியோவையும் பிளே செய்கிறது. மேலும், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடியோ கிளிப்பையும் இதில் பிளே செய்துகொள்ளலாம். செப்டம்பர் இறுதிக்குள் இந்த தொட்டில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக சுமார் ரூ. 1,12,000 நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470