இனி சாதா ஹெல்மெட் எதுக்கு.. வந்தாச்சு புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்.. என்ன விலை? என்ன மாடல்?
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதுபோன்ற எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தான் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் சாதா ஹெல்மெட் பயன்படுத்துவதை விட பலர் ஸ்மார்ட் ஹெல்மெட் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஏதர் நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இந்தியாவில் பிரபல மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy) சமூக தினம் 2025 நிகழ்ச்சியில் அப்டேட் செய்யப்பட்ட Halo ஹெல்மெட்டை வெளியிட்டுள்ளது. குறிப்பாக Halo Bit மற்றும் Halo Regular என இரண்டு மாடல்களில் ஸ்மார்ட் ஹெல்மெட் கிடைக்கிறது. இப்போது இந்த புதிய ஹெல்மெட் மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹேலோ ஹெல்மெட் மாடல்களில் சார்ஜ் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது முன்பு இருந்த வயர்லெஸ்சார்ஜிங் முறையிலிருந்து விலகி, இப்போது USB Type-C கேபிள் மூலம் சார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஹெல்மெட் ISI சான்றிதழ் பெற்ற முழு முக மாடல் ஆகும்.
குறிப்பாக ஏதர் எனர்ஜி அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் ஹெல்மெட் மூன்று நிறங்களிலும், பல அளவுகளிலும் வாங்க கிடைக்கிறது. பின்பு இந்த புதிய ஹேலோ ஹெல்மெட்டில் புளூடூத் இணைத்தல், மைக் யூனிட், உடைகள் கண்டறியும் தொழில்நுட்பம் போன்ற நவீன வசதிகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அதுவும் இந்த புதிய வகை ஹெல்மெட்டை அணிந்தவுடன் அது தானாகவே Ather ஸ்கூட்டருடன் connect ஆகும். பின்பு இதன் மூலம் பயணிகள் மியூசிக் கேட்கவும், அழைப்புகளை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ-ஆக பேசவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய ஹெல்மெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் பல புதிய அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏதர் எனர்ஜி நிறுவனம்.
ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஹெல்மெட் மாடல் Ather Stack 7 OS மூலம் இயங்குகிறது. பின்பு இதில் பல அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதாவது நெவிகேஷன் அலர்ட், குழி இல்லாத பாதை தகவல், திருட்டு எச்சரிக்கை, இழுத்து செல்லும் எச்சரிக்கை, நேரடி கிரிக்கெட் ஸ்கோர்கள் போன்றவை ஹெல்மெட் மூலம் நேரடியாக ரைடருக்கு வரும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஆகவே Halo Bit மற்றும் Halo Regula என இரண்டு மாடல்களும் பயணத்தின் போது சிறந்த பயண அனுபவம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதியும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பல அசத்தலான தொழில்நுட்ப அம்சங்கள் இந்த ஏதர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலில் உள்ளதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் மாடல்கள் விலையை பார்க்கலாம்.
ஏதர் எனர்ஜி அறிமுகம் செய்த Halo Bit ஹெல்மெட் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. பின்பு இதன் Halo Regular ஹெல்மெட் மாடலின் விலை ரூ.4,999-ஆக உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஹேலோ ஹெல்மெட்டின் விலை ரூ.9,999 ஆக இருந்தது. எனேவ அதை விட இப்போது மிகக் குறைந்த விலையில் இந்த ஹெல்மெட் மாடல்கள் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
photo credit: bikewale, ndtv


Click it and Unblock the Notifications