அறிமுகம் செய்தது Asus! இந்த விலையில் ஃபோல்டபிள் லேப்டாப் வாங்கலாமா?

|

17.3 இன்ச் ஃபோல்டபிள் டிஸ்ப்ளே உடன் Asus Zenbook 17 Fold OLED இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. OLED டிஸ்ப்ளே கொண்ட இந்த Zenbook 17-Fold லேப்டாப் ஆனது இந்திய பயனர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு இடங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதை டேப்லெட் ஆகவும் பயன்படுத்தலாம், பெரிய மானிட்டராகவும் பயன்படுத்தலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட்

அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட்

கடந்த ஜனவரி மாதம் நடந்த CES 2022 நிகழ்வில் முதன்முதலாக இந்த அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் ஓஎல்இடி இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதை பயனர்கள் பெரிய டேப்லெட் ஆகவும் காம்பாக்ட் மானிட்டராகவும் பயன்படுத்தலாம். ஃபோல்ட் நிலையில் இந்த லேப்டாப் ஆனது 12.5 இன்ச் பார்க்கும் பகுதியைக் கொண்டிருக்கிறது.

மென்மையான முறையில் ஃபோல்ட் செய்யும் வகையில் இதில் இரண்டு கீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஃபோல்டபிள் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்

இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்

அதேபோல் இந்த லேப்டாப் இல் வைஃபை 6இ, டால்பி ஸ்பீக்கர்கள், டூயல் தண்டர்போல்ட் 4 போர்ட்கள் மற்றும் 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் போன்ற பல கண்கவர் அம்சங்களையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது.

Asus Zenbook 17 விலை

Asus Zenbook 17 விலை

Asus Zenbook 17 Fold லேப்டாப்க்கு என பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. உலகின் முதல் 17 இன்ச் ஃபோல்டபிள் லேப்டாப் இதுவாகும். ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் பெரிய அளவிலான டிஸ்ப்ளே உடன் அறிமுகமான லேப்டாப் ஆக அசுஸ் ஜென்புக் 17 இருக்கிறது.

தலை சுத்த வைக்கும் விலை

தலை சுத்த வைக்கும் விலை

OLED டிஸ்ப்ளே கொண்ட Zenbook 17-Fold ஆனது இந்திய பயனர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ரூ.3,29,990 என கிடைக்கிறது. ஆனால் இதே லேப்டாப் முன்பதிவுக்கு கடந்த சில வாரங்களாக ரூ.2,84,290 என கிடைத்தது. இதன் விலை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டாலும், அம்சங்கள் நியாயமானதாகவும் அதீத வகையிலும் இருக்கிறது.

Asus Zenbook 17 Fold சிறப்பம்சங்கள்

Asus Zenbook 17 Fold சிறப்பம்சங்கள்

Asus Zenbook 17 Fold சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், அசுஸ் நிறுவனம் BOE உடன் இணைந்து இதன் டிஸ்ப்ளேவை உருவாக்கி இருக்கிறது. இந்த லேப்டாப் இல் தனியுரிம கீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லேப்டாப் ஃபோல்ட் செய்வதில் இந்த கீல்கள் மிக ஏதுவாக செயல்படுகிறது. எர்கோசென்ஸ் ப்ளூடூத் கீபோர்ட் உடன் இது தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த கீபோர்ட் வெறும் 5.5 மிமீ மெல்லியதாகவும் 300 கிராம் எடை உள்ளதாகவும் இருக்கிறது. இதில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் டிஸ்ப்ளேயின் கீழ் பாதியையும் கீபோர்ட் ஆக பயன்படுத்தலாம்.

ஃபோல்டபிள் டிஸ்ப்ளே

ஃபோல்டபிள் டிஸ்ப்ளே

ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்கள் போல் Zenbook 17 Fold OLED இல் வெளிப்புற கவர் டிஸ்ப்ளே இடம்பெறவில்லை. ஆனால் பிரதான காட்சியில் அனைத்து பயன்பாட்டையும் நீங்கள் மேற்கொள்ளலாம். 2560 x 1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 17.3-இன்ச் FOLED டிஸ்ப்ளே மற்றும் ​​1920 x 1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 12.5 இன்ச் பேனல் என ஃபோல்டபிள் டிஸ்ப்ளே செயல்படுகிறது.

டால்பி விஷன் ஆதரவு

டால்பி விஷன் ஆதரவு

17.3-இன்ச் டிஸ்ப்ளே ஆனது தீங்கு விளைக்கும் ப்ளூ லைட் குறைப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. டால்பி விஷன் ஆதரவும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஃபோல்டபிள் நிலையில் டிஸ்ப்ளே 3:2 விகிதத்துடன் 1920x1280 பிக்சல் தெளிவுத்திறனை கொண்டிருக்கிறது.

16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

இந்த லேப்டாப் ஆனது 12-வது ஜென் இன்டெல் கோர் i7-1250U சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு செயல்திறன் கோர்கள் மற்றும் எட்டு செயல்திறன் கோர்கள் என 10 கோர்களின் சக்தியை கொண்டிருக்கிறது இந்த சிப்செட். இந்த லேப்டாப் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

டைப்-சி போர்ட்கள் மூலம் 65W வேகமான சார்ஜிங் ஆதரவை பெறலாம். USB PD சார்ஜரையும் பயன்படுத்தியும் சார்ஜ் செய்யலாம். 75WHr பேட்டரி ஆயுள் வழங்கப்படுகிறது. Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, IR உடன் 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட் என பல இணைப்பு ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Asus Zenbook 17 Fold OLED Launched in india with Intel Core i7 12th Gen CPU

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X