அவனை நிறுத்த சொல்லுங்க டா.. 360 டிகிரி டச் ஸ்க்ரீன் மாடல் உட்பட மேலும் 2 Asus VivoBook லேப்டாப் அறிமுகம்!
அவனை நிறுத்த சொல்லுங்க டா என்று கூறவைக்கும் படியாக.. ஆசஸ் நிறுவனம் 'கன்ட்டினியூஸ்' ஆக.. அதாவது தொடர்ச்சியான முறையில் புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையில் ஆசஸ் நிறுவனம் மேலும் 2 புதிய விவோபுக் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த ஒன்றரை மாதங்களாக.. ஆசஸ் நிறுவனம் அதன் ஜென்புக் (ZenBook), விவோபுக் (VivoBook), எக்ஸ்பர்ட்புக் (ExpertBook) மற்றும் க்ரோம்புக் (ChromeBook) சீரீஸின் கீழ் புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஆசஸ் விவோபுக் எஸ்14 (Asus Vivobook S14) மற்றும் ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் (Asus Vivobook S14 Flip) லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆசஸ் நிறுவனத்தின் இந்த புதிய விவோபுக் எஸ்-சீரிஸ் லேப்டாப்கள் ஆனது 13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர்களுடன் இன்டல் யுஎச்டி கிராபிக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆசஸ் விவோபுக் எஸ்14 மற்றும் ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் ஆகிய இரண்டுமே 14-இன்ச் டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன.
முக்கிய வேறுபாடாக பிளிப் வேரியண்ட் அணை ஸ்டைலஸ் ஆதரவுடன் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த 2 லேப்டாப்களுமே விண்டோஸ் 11 கொண்டு இயங்குகின்றன மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2024 (Microsoft Office 2024) மற்றும் மைக்ரோசாப்ட் 365 பேஸிக்-க்கான (Microsoft 365 Basic) ஒரு வருட சந்தாவுடன் வருகின்றன.
ஆசஸ் விவோபுக் எஸ்14 மற்றும் ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் லேப்டாப் மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஆசஸ் விவோபுக் எஸ்14 லேப்டாப் ஆனது இந்தியாவில் ரூ.67,990 முதல் வாங்க கிடைக்கிறது . மறுகையில் உள்ள ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் லேப்டாப் ஆனது ரூ.69,990 முதல் வாங்க கிடைக்கிறது. இவ்விரு லேப்டாப் மாடல்களுமே கூல் சில்வர் கலரில் வாங்க கிடைக்கின்றன.
2-இன்-1 விவோபுக் எஸ்14 பிளிப் லேப்டாப் மாடலை ஆசஸ் இ-ஷாப் (Asus e-shop) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்கலாம். மேலும் இது ஆசஸ் எக்ஸ்க்ளூஸிவ் கடைகள், பிராந்திய சில்லறை விற்பனை கூட்டாளர்கள் மற்றும் பல பிராண்ட் சில்லறை விற்பனை கடைகள் வழியாகவும் விற்பனை செய்யப்படும். மறுகையில் உள்ள விவோபுக் எஸ்14 லேப்டாப் மாடல் ஆனது ஆசஸ் இ-ஷாப் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.
ஆசஸ் விவோபுக் எஸ்14 மற்றும் ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் லேப்டாப் மாடல்களின் முக்கிய அம்சங்கள்:
- இரண்டுமே 14-இன்ச் WUXGA (1920 × 1200 பிக்சல்கள்) IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
- பிளிப் மாடலில் உள்ள டிஸ்பிளே 360-டிகிரி சுழற்சியை வழங்கும் ஸ்டைலஸ் ஆதரவுடன் கூடிய டச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது
- இரண்டுமே இன்டல் யுஎச்டி கிராபிக்ஸ் கொண்ட இன்டல் கோர் ஐ5-13420H சிபியு
- இரண்டாவது ஸ்லாட் வழியாக 24ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி M.2 NVMe SSD ஆகியவற்றை கொண்டுள்ளன.
- இரண்டு லேப்டாப்களிலும் ப்ரைவஸி ஷட்டருடன் கூடிய 1080p FHD கேமராவை கொண்டுள்ளது
- ஆசஸ் விவோபுக் எஸ்14 லேப்டாப் மாடல் ஆனது வைஃபை 6இ மற்றும் ப்ளூடூத் 5.3, இரண்டு யூஎஸ்பி 2.0 டைப் ஏ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப் சி போர்ட்கள் மற்றும் ஒரு எச்டிஎம்ஐ 2.1 போர்ட் ஆகிய கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
- ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் மாடல் ஆனது ஒரு யூஎஸ்பி 2.0 டைப் ஏ போர்ட், ஒரு யூஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் ஏ போர்ட், ஒரு யூஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட் மற்றும் ஒரு எச்எம்டிஐ 2.1 போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது
- இரண்டு மாடல்களிலும் 3.5மிமீ காம்போ ஆடியோ ஜாக் உள்ளது
- ஆசஸ் விவோபுக் எஸ்14 லேப்டாப் மாடல் ஆனது 65W இல் சார்ஜ் செய்யக்கூடிய 4-செல் 70Wh Li-ion பேட்டரியை கொண்டுள்ளது
- ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் லேப்டாப் ஆனது 90W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 3-செல் 50Wh Li-ion பேட்டரியை கொண்டுள்ளது.
- இரண்டு மாடல்களும் US MIL-STD 810H ட்யூரபிலிட்டி சான்றிதழை கொண்டுள்ளன
- அளவீட்டில் ஆசஸ் விவோபுக் எஸ்14 லேப்டாப் ஆனது 315.2×223.4×17.9மிமீ அளவிலும் 1.4 கிலோ எடையிலும் உள்ளது. மறுகையில் உள்ள ஆசஸ் விவோபுக் எஸ்14 பிளிப் லேப்டாப் ஆனது 313.2×227.6×18.9மிமீ அளவிலும் 1.5 கிலோ எடையிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications