Asus ROG Zephyrus Duo 15 டூயல் டிஸ்பிளே கொண்ட லேப்டாப் விற்பனை! விலை இது தான்!

|

ஆசுஸ் நிறுவனம் தனது ஆசுஸ் ROG செபிரஸ் டியோ 15 (Asus ROG Zephyrus Duo 15) என்ற டூயல் டிஸ்பிளே கொண்ட லேப்டாப் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசஸ் ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப் குறித்த விலை விபரம் மற்றும் சிறப்பம்சம் போண்டா தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Asus ROG Zephyrus Duo 15 கேமிங் லேப்டாப்

Asus ROG Zephyrus Duo 15 கேமிங் லேப்டாப்

கேமிங் லேப்டாப் மாடலான Asus ROG Zephyrus Duo 15 சாதனம், ROG ஸ்கிரீன்பேட் பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 14.1' இன்ச் அளவு கொண்ட 13 டிகிரி ஹின்ஜ் உடைய டிஸ்பிளேயாக வருகிறது. Asus ROG Zephyrus Duo 15 லேப்டாப் 10வது தலைமுறை இன்டெல் கோர் i9 பிராசஸருடன் வருகிறது. இதில் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் மேக்ஸ்-கியூ கிராபிக்ஸ் (Nvidia GeForce RTX 2080 Super Max-Q) கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் டிஸ்பிளே விபரம்

டூயல் டிஸ்பிளே விபரம்

ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப், 15.6' இன்ச் 4K டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 300 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் முழு எச்டி டிஸ்பிளேவிலும் கிடைக்கிறது. இரண்டாம் நிலை டிஸ்பிளே 14' இன்ச் திரையுடன் வருகிறது, இது முதன்மை காட்சியின் அகலத்துடன் பொருந்த 3838 x 1100 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலைத் டிஸ்பிளே டச் பயன்பாட்டை ஆதரிக்கிறது.

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.!

13 டிகிரி ஹின்ஜ்

13 டிகிரி ஹின்ஜ்

மேலும் இந்த இரண்டாம் நிலை டிஸ்பிளே 13 டிகிரி ஹின்ஜ் உடன் வருகிறது, இது பயனரின் பயன்பாட்டையும் மற்றும் தெரிவுநிலையை மேம்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. சிறந்த வெப்ப சமநிலையை உருவாக்கும் திறனுக்காக இது ஒரு பெரிய வென்ட் போல பயன்படுகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. ஓபன் டைப் டிஸ்பிளே என்பதால் காற்றை திறந்த இடத்தின் வழி செல்ல இது அனுமதிக்கிறது.

10வது தலைமுறை இன்டெல் கோர் i9

10வது தலைமுறை இன்டெல் கோர் i9

Asus ROG Zephyrus Duo 15 லேப்டாப் 10வது தலைமுறை இன்டெல் கோர் i9 அல்லது கோர் i7 எச்-சீரிஸ் செயலிகளால் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 2080 சூப்பர் அல்லது ஜியிபோர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 2070 சூப்பர் டிஸ்க்ரீட் ஜி.பீ.யூ மற்றும் 48 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய டி.டி.ஆர் 4 ரேம் 3,200 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் இயங்குகிறது. இந்த லேப்டாப் 2TB வரை RAID 0 M.2 NVMe PCI 3.0x4 SSD சேமிப்பகத்தையும் வழங்குகிறது.

பூமியை சுற்றிவரும் நீர்யானை அளவிலான புதிய நிலவு கண்டுபிடிப்பு! உண்மையை சொன்ன விஞ்ஞானி!பூமியை சுற்றிவரும் நீர்யானை அளவிலான புதிய நிலவு கண்டுபிடிப்பு! உண்மையை சொன்ன விஞ்ஞானி!

இணைப்பு விபரங்கள்

இணைப்பு விபரங்கள்

ஆசஸ் ROG செபிரஸ் டியோ 15, 90Wh பேட்டரியுடன் 240W சார்ஜரைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இணைப்பு முன்னணியில், இது வைஃபை 6, புளூடூத் 5.0, டிஸ்ப்ளே போர்ட் 1.4, தண்டர்போல்ட் 3, பவர் டெலிவரி 3.0, இரண்டு யூ.எஸ்.பி 3.2 ஜென் 1 டைப்-ஏ போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 3.2 ஜெனரல் 2 டைப்-ஏ போர்ட், எச்டிஎம்ஐ 2.0 பி போர்ட், 3.5 மிமீ மைக்ரோஃபோன் ஜாக், 3.5 மிமீ மைக்ரோஃபோன்-இன் / ஹெட்ஃபோன்-அவுட் காம்போ ஜாக் மற்றும் ஆர்ஜே 45 போர்ட் உடன் வருகிறது.

Asus ROG Zephyrus Duo 15 லேப்டாபின் விலை என்ன?

Asus ROG Zephyrus Duo 15 லேப்டாபின் விலை என்ன?

Asus ROG Zephyrus Duo 15 லேப்டாபின் எடை 2.4 கிலோகிராம் ஆகும். இது ஸ்மார்ட் AMP தொழில்நுட்பத்துடன் இரண்டு 4W ஸ்பீக்கர்களையும் ஒரு வரிசை மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் சுமார் ரூ.2,79,990 ஆகும். இந்த லேப்டாப் இப்போது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆசுஸ் பிரத்தியேக கடைகள் மற்றும் ROG ஸ்டோர்ஸ் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ROG Zephyrus Duo 15 Launched In India, Price Specification And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X