உங்க பழைய மவுஸை தூக்கி போடுங்க.! இந்த Asus மவுஸை வாங்குங்க.! ஏன்னா இது?

|

உங்களிடம் லேப்டாப் அல்லது ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது என்றால், கட்டாயமாக உங்களிடம் ஒரு மவுஸ் இருந்தே ஆக வேண்டும்.! மவுஸ் என்பது மிகவும் முக்கியமான ஒரு கேட்ஜெட் ஆகும். என்ன தான் லேப்டாப்பில் டச் பேட் வழங்கப்பட்டாலும், மவுஸ் பிடித்து வேலை பார்ப்பது போன்ற எளிதான பயன்பாட்டை நம்மால் டச் பேடில் பயன்படுத்த முடியாது.

கைக்கு அடக்கமான ஒரு மவுஸ் இருந்தால் மட்டுமே, உங்களால் லேப்டாப்பையும், கம்ப்யூட்டரையும் டென்ஷன் இல்லாமல் இயக்க முடியும். தொழில்நுட்பம் வளர-வளர மௌலின் வேகமும் அதிகரித்து வருகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், பல விதமான மவுஸ்கள் இப்போது சந்தையில் வாங்குவதற்குக் கிடைக்கின்றன. இதில் சில கேமிங் மவுஸ்களும் உள்ளன, இன்னும் சில மவுஸ் சாதனங்கள் தொடர்ந்து பழைய பாணியிலேயே பயணித்த வருகின்றன.

உங்க பழைய மவுஸை தூக்கி போடுங்க.! இந்த Asus மவுஸை வாங்குங்க.! ஏன்னா?

எது எப்படியாக இருந்தாலும், மவுஸுடைய வேலை எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. லெப்ட் கிளிக், ரைட் கிளிக், ஸ்க்ரோல், நேவிகேஷன், மூமென்ட் போன்ற எளிமையான பயன்பாட்டைக் கொண்டுள்ளன. கேமிங் கேட்ஜெட் சாதனங்களை அறிமுகம் செய்யும் அசஸ் (Asus) நிறுவனம் இப்பொழுது புதிய மவுஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாவு சாதனம் முற்றிலும் வயர்லெஸ் முறையில் இயக்கப்படும் ஒரு ப்ளூடூத் வயர்லெஸ் டிவைஸ் ஆகும். இந்த மவுஸ் சாதனத்தை அசஸ் நிறுவனம் அசஸ் ராக் கிரிஸ் வயர்லெஸ் எய்ம் பாயிண்ட் மவுஸ் (ASUS ROG Keris Wireless AimPoint Mouse) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு கேமிங் மௌஸ் சாதனமாகும். இந்த அசஸ் ராக் கிரிஸ் வயர்லெஸ் எய்ம் பாயிண்ட் சாதனம் டூயல் டோன் டிசைனில் வருகிறது. இப்பொழுது இந்த டிவைஸ் மூன் லைட் வெயிட் மற்றும் ஸ்டாண்டர்ட் பிளாக் நிறங்களில் வருகிறது.

இந்த சாதனத்தில் பிரி கட் ராக் பேட்டன் மவுஸ் கீரிப் டேப் மவுஸின் வலது புறத்தில் கூடுதல் க்ரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் ஒட்டுமொத்தமாகவே வெறும் 75 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளது. இதனுடைய மெல்லிய வடிவமைப்பும், இதனுடைய குறைந்த எடையும் உங்கள் கைகளுக்கு மிருதுவான அனுபவத்தை வழங்குகிறது..

அசஸ் ராக் கிரிஸ் வயர்லெஸ் எய்ம் பாயிண்ட் சாதனத்தில் ஆர்.ஜி.பி லைட் கொண்ட அசஸ் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மவுஸ் ஒட்டு மொத்தமாக ஐந்து ப்ரோக்ராம் பட்டன்களை கொண்டுள்ளது. இதில் இரண்டு லெப்ட் கிளிக் மட்டும் ரைட் கிளிக் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. மற்றொன்று ஸ்க்ரோல் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பட்டங்களும் இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

உங்க பழைய மவுஸை தூக்கி போடுங்க.! இந்த Asus மவுஸை வாங்குங்க.! ஏன்னா?

இந்த மவுஸ் ஆப்டிகல் சென்சார் மற்றும் ஆர்.ஓ.ஜி ஸ்பீட் நோவா வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு மிகவும் துல்லியமான மவுஸ் ட்ராக்கிங் அனுபவமும்; தாமதம் இல்லாத கிளிக்கிங் பயன்பாடும் கிடைக்கிறது. இந்த டிவைஸ் உடைய சென்சிட்டிவிட்டி செட்டிங்ஸ் 100 முதல் 36,000 டிபிஐ வரை செல்கிறது.

இந்த மௌஸின் வேகம் பற்றி பேசுகையில் இது 650 இன்சை ஒரு நொடியில் கடக்கிறது. இதனுடைய ஆக்ஸிலரேஷன் வேகம் 50g வரை செல்கிறது. இது ஒரு வயர்லெஸ் மவுஸ் சாதனம் என்பதனால் இது ப்ளூடூத் USB இல் இயங்குகிறது. இதில் 2.4GHz RF அம்சமும் இடம்பெறுகிறது. ஆர்ஃஎப் மோடில் பயன்படுத்தும் பொழுது இந்த மவுஸ் 119 மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது. அதேபோல் ப்ளூடூத் மோடில் இயங்கும் பொழுது இந்த மவுஸ் 150 மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது.

இந்த மௌஸின் விலை ரூபாய் 7499 மட்டுமே. இது தற்போதைய சலுகை விலையாகும். இதன் அசல் விலை 8999 மட்டுமே என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
ASUS ROG Keris Wireless AimPoint Mouse Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X