அடே சாமி.. இப்படி இருக்கனும் லேப்டாப்.. 64GB ரேம்.. 24GB ஜிபியு.. OLED டிஸ்பிளே.. 2TB ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுடன் ஆசஸ் ப்ரோஆர்ட் பி16 (ASUS ProArt P16) லேப்டாப் களமிறங்கி இருக்கிறது. 64 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 24 ஜிபி கிராபிக்ஸ் கார்டு, ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிடுகிறது.
கேமிங் மட்டுமல்லாமல், ப்ரோ கிரேடு வீடியோ எடிட்டிங் அவுட்புட் கொடுக்கும் லேப்டாப் மாடலை தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இந்த ஆசஸ் ப்ரோஆர்ச் பி16 லேப்டாப் களமிறங்கி இருக்கிறது. ஆகவே, விலையும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது.

ஆசஸ் ப்ரோஆர்ட் பி16 அம்சங்கள் (ASUS ProArt P16 Specifications): இந்த பிரீமியம் மாடலில் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) கிடைக்கிறது. ஆகவே, மைக்ரோசாப்ட் 365 பேசிக் (Microsoft 365 Basic) மட்டுமல்லாமல், 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் வருகிறது. இதை 1 வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆபிஸ் ஹோம் 2024 (Office Home 2024) லைப்டைம் வேலிடிட்டியில் வருகிறது.
ஏஎம்டி ரைசென் ஏஐ 9 எச்எக்ஸ் 370 (AMD Ryzen AI 9 HX 370) ப்ராசஸர் மற்றும் என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 5090 ஜிபியு ( NVIDIA GeForce RTX 5090 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இதுவொரு 24 ஜிபிக்கான கிராபிக்ஸ் கார்டாகும். ஆகவே, கேமிங் உள்பட மொத்த டிஸ்பிளே அவுட்புட்டும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கும். 16 இன்ச் (3840 x 2400 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 4K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1600 நிட்ஸ் எச்டிஆர் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இதில் டச் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஸ்டைலஸ் (Stylus) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 64 ஜிபி ரேம் கிடைக்கிறது.
2 டிபி ஸ்டோரேஜ் மற்றும் கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ப்ரோ கிரேடு வீடியோ எடிட்டிங் சப்போர்ட் கிடைக்கும். 4K மற்றும் 8K வீடியோக்களிலும் லேக் ப்ரீ அவுட்புட் கிடைக்கும். பிலிம் மேக்கிங் மற்றும் வீடியோ எடிட்டிங் அவுட்புட் கொடுக்க விரேம் (VRAM), ஏஐ எபெக்ட்ஸ் (AI Effects) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.
இந்த ஆசஸ் ப்ரோஆர்ட் பி16 மாடலில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட ஆசஸ் ஏஐசென்ஸ் (ASUS AiSense) கேமரா கிடைக்கிறது. இதில் ஐஆர் (IR) சப்போர்ட் கிடைக்கிறது. நானோ பிளாக் (Nano Black) கலரில் அலுமினியம் பாடி கொடுக்கிறது. பேக்லிட் சிக்லெட் கீபோர்ட் (Backlit Chiclet Keyboard) மற்றும் பிரிசியான் டச்பேட் (Precision Touchpad) கிடைக்கிறது. டயல்பேட் (DialPad) உள்ளது.
மேலும், கோபைல்ட் கீ (Copilot Key) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built-in Speaker) கிடைக்கிறது. இதில் ஸ்மார்ட் ஏஎம்பி டெக்னாலஜி (Smart Amp Technology) கிடைக்கிறது. மேலும், பில்ட்-இன் அரேய் மைக்ரோபோன் மற்றும் 3.5 எம்எம் காம்போ ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
240W ஏசி அடாப்டர் மற்றும் 4-செல் லித்தியம் பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. யுஎஸ்பி ஜென் 2, ஜென் 3 டைப்-சி போர்ட், டைப்-ஏ போர்ட் கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் புளூட்டன் செக்யூரிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஆசஸ் ப்ரோஆர்ட் பி16 (H7606W) மாடலானது ரூ.3,59,990 விலைக்கு கிடைக்கிறது. அமேசான், ஆசஸ் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








