Home
Gadgets

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4,912 கம்மி ரேட்ல 9000mAh பேட்டரி.. QUAD ஸ்பீக்கர்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பிரீமியம் டேப்லெட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஆசஸ் பேட் (ASUS Pad) மாடலின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. 9000mAh பேட்டரி, 4 ஸ்பீக்கர்கள், ஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஸ்டைலஸ் மற்றும் கீ-போர்ட் சப்போர்ட் கொண்ட மாடலாக கிடைக்கிறது. இந்த மாடலின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

ஆசஸ் பேட் விலை (ASUS Pad Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,990 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 128 ஜிபி வேரியண்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,912 வரையில் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4,912 கம்மி ரேட்ல 9000mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, ரூ.41,078 விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ளாலம். அதேபோல 256 ஜிபி மெமரி வேரியண்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5,112 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.44,878 விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். இதுபோக ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் இந்த ஆசஸ் பேட் மாடலை வாங்கி கொள்ளலாம். இது வை-பை ஒன்லி (Wi-Fi Only) மாடலாக இருக்கிறது. ப்யூர் ஒயிட் (Pure White) கலரில் மட்டுமே இந்த ஆசஸ் பேட் விற்பனைக்கு கிடைக்கிறது. டி3201 (T3201) மாடலாக இருக்கிறது. இந்த விலை மற்றும் தள்ளுபடியை பிளிப்கார்ட் தளத்தில பெற்று கொள்ளலாம்.

ஆசஸ் பேட் அம்சங்கள் (ASUS Pad Specifications): 12.2 இன்ச் (2800 x 1840 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2.8K ரெசொலூஷன் கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் லோவ் ஃபிளிக்கர் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளன.

ஆகவே, 4 ஸ்பீக்கர்களில் அவுட்புட் கிடைக்கும். ஸ்டீரியோ அனுபவம் கொடுக்க 360 டிகிரி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 (Octa Core 4nm MediaTek Dimensity 8300) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கொடுக்க ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 5 எம்பி கேமரா கிடைக்கிறது. 6.5 எம்எம் தடிமன் பாடியில் 9000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மொத்தமாக 523 கிராம் எடை கொடுத்துள்ளது. இது பேட்டரியுடன் கிடைக்கும் எடையாகும். இதுபோக ப்ளூடூத் கீபோர்ட் (Bluetooth Keyboard) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஆசஸ் பென் 2.0 (Asus Pen 2.0) சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் டேப்லெட் மாடல்களை விரும்பும் பிரியர்களுக்கு இது பக்காவான தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
ASUS Pad With Wi-Fi Only Available At Rs 4912 Discount on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X