OLED டிஸ்பிளே.. QUAD ஸ்பீக்கர்கள்.. 9000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. புது ASUS பேட்.. எந்த மாடல்?
ஓடிடி பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் விரும்பும்படியான பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுடன் ஆசஸ் பேட் டி3201 (ASUS Pad T3201) வெளியாக இருக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற மற்ற பீச்சர்களும் மிரளவிடுகின்றன. இந்த ஆசஸ் பேட் டி3201 மாடலின் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஆசஸ் பேட் டி3201 மாடலானது, வருகிற ஆகஸ்டு 6ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் கொடுத்த அதே பீச்சர்கள் இடம்பெறும் என்பதால், அதை இப்போது தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. முழு பீச்சர்களையும் பார்க்கலாம்.

ஆசஸ் பேட் டி3201 அம்சங்கள் (ASUS Pad T3201 Specifications): 12.2 இன்ச் (2800 x 1840 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஆசஸ் பேட் டி3201 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2.8K ரெசொலூஷன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஆசஸ் பேட் டி3201 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் கிடைக்க இருக்கிறது.மேலும், 1 டிபிக்கு ஸ்டோரேஜ் கொடுக்கும்படி மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 13 எம்பி ரியர் கேமராவை இந்த ஆசஸ் பேட் டி3201 மாடல் கொடுத்து இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது.
டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் வருகிறது.
இந்த பேட்டரியுடன் 6.5 எம்எம் தடிமன் மற்றும் 523 கிராம் எடை கொடுத்துள்ளது. வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஜி சென்சார் (G Sensor), கைரோ சென்சார் (Gyro Sensor), லைட் சென்சார் (Light Sensor) மற்றும் ஹால் சென்சார் (Hall Sensor) ஆகிய சென்சார்களை இந்த ஆசஸ் பேட் டி3201 கொடுத்துள்ளது.
இந்த பீச்சர்களுடன் வருகிற ஆகஸ்டு 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஆசஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ஆசஸ் பேட் டி3201 மாடலின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஓஎல்இடி டிஸ்பிளே கொண்ட மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications