மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.45,000 பட்ஜெட்ல பிரீமியம் டேப்லெட்.. 9000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கும் ஆசஸ் பேட் டி3201 (ASUS Pad T3201) மாடலின் ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் தெரியவந்துள்ளன. அதேபோல விற்பனை விவரங்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே, முழு பீச்சர்களும் வெளியாகின. ஆனால், விலை விவரங்கள் மட்டும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது, தெரியவந்துள்ளது.
ஆசஸ் பேட் டி3201 மாடலின் முழு பீச்சர்களும் 2 வாரங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டன. பிரீமியமான டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களை கொண்டிருந்ததால், விலையும் பிரீமியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப கிட்டத்தட்ட பிரீமியமான விலையிலேயே கிடைக்க இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டாக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,990 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,990 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் கிடைக்க இருக்கிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் மற்றும் ஆசஸ் தளங்களில் வாங்கி கொள்ளலாம்.
பிரீமியம் டேப்லெட் அனுபவம் கொடுப்பதற்காக ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. மற்ற டேப்லெட்களில் எல்சிடி டிஸ்பிளேவே கிடைக்கும். ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களில் மட்டுமே ஓஎல்இடி அல்லது அமோலெட் டிஸ்பிளே கிடைக்கும். ஆகவே, இந்த ஆசஸ் பேட் டி3201 மாடலும் பிரீமியம் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.
இதுபோக 4 ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், 360 டிகிரி ஆடியோ சப்போர்ட் கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. லேப்டாப்களுக்கு நிகரான அவுட்புட் கொடுக்க ஆசஸ் பென் 2.0 (Asus Pen 2.0) மற்றும் ப்ளூடூத் கீபோர்ட் (Bluetooth Keyboard) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆசஸ் பேட் டி3201 அம்சங்கள் (ASUS Pad T3201 Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 4nm) சிப்செட்டை ஆசஸ் பேட் டி3201 மாடல் கொண்டுள்ளது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் கொண்ட 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 12.2 இன்ச் (2800 x 1840 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2.8K ரெசொலூஷன் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கொடுத்துள்ளது. லோவ் ஃபிளிக்கர் மற்றும் லோவ் ப்ளூ லைட் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு பக்கா பொருத்தமாக இருக்கும்படி டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் 360 டிகிரி சினிமாட்டிக் சவுண்ட் (Cinematic Sound) சப்போர்ட் கிடைக்கிறது. மியூசிக், மூவிஸ் மற்றும் கேமிங்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ குவாலிட்டி பக்காவாக இருக்கும். ஆட்டோ போகஸ் (Auto Focus) கேமரா உள்ளது.
13 எம்பி ரியர் கேமரா + செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரியை இந்த ஆசஸ் பேட் டி3201 மாடல் பேக் செய்துள்ளது. 6.5 எம்எம் தடிமன் வருகிறது. 523 கிராம் எடை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட், வை-பை 6இ கனெக்டிவிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications