ரூ.11111 நோ காஸ்ட் EMI-இல் அடிச்சு நொறுக்கும் புது Asus லேப்டாப்கள்.. எந்த மாடல்கள்? என்ன விலை?
ரூ.30,000 - ரூ.40,000 பட்ஜெட்டில், ஆசஸ் (Asus) நிறுவனம் அதன் க்ரோம்புக் சீரிஸின் கீழ் 3 புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில் அதன் புதிய ROG Zephyrus G14 மற்றும் G16 சீரீஸ், ProArt PZ14 லேப்டாப்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட TUF Gaming A14 இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது
நினைவூட்டும் வண்ணம் - கேமிங் மற்றும் கன்டென்ட் கிரியேஷனுக்காக (Content Creation) உருவாக்கப்பட்ட ஆசஸ் நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் சீரீஸ் ஆனது, புதிய AI திறன்கள் மற்றும் Nvidia GeForce RTX 50 சீரீஸ் கிராபிக்ஸ் உடன் இம்மாத தொடக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

ROG Zephyrus Duo மாடலானது Intel Core Ultra 9 Series 3 ப்ராசஸரிலும், ROG Zephyrus G16 மாடலானது Intel Core Ultra Series 3 ப்ராசஸரிலும் இயங்குகின்றன. ROG Zephyrus G16 மாடலில் Intel Core Ultra 9 ப்ராசஸர் கொண்ட விருப்பங்களும் உள்ளன Asus ProArt PZ14 மாடலில் Snapdragon X2 Elite ப்ராசஸரிலும் உள்ளது. அதேவேளையில், மேம்படுத்தப்பட்ட TUF Gaming A14 மாடலானது AMD Ryzen AI 9 465 ப்ராசஸரை கொண்டுள்ளது.
விலை விவரங்கள்: மேம்படுத்தப்பட்ட Asus ROG Zephyrus G14 சீரீஸில், GA403GM-SY163WS என்ற மாடல் நம்பர் கொண்ட RTX 5060 வேரியண்டின் விலை ரூ.2,59,990-ல் தொடங்குகிறது. GA403GM-SY132WS என்ற மாடல் நம்பர் கொண்ட RTX 5060 வேரியண்டின் விலை ரூ.2,89,990-ல் தொடங்குகிறது. RTX 5070 GPU கொண்ட Asus Zephyrus ROG G14-இன் விலை ரூ.3,69,990-ல் தொடங்குகிறது.
RTX 5070 Ti கொண்ட Asus ROG Zephyrus G16 இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது; இவற்றின் ஆரம்ப விலை முறையே ரூ.4,59,990 (GU606AR-TB039WS - RTX5070Ti) மற்றும் ரூ.4,19,990 (GU606AR-TB112WS - RTX5070Ti) ஆகும். RTX 5080 வசதி கொண்ட Asus ROG Zephyrus G16 (GU606AW-TB043WS - RTX5080) மாடலின் விலை ரூ.5,09,990-ல் தொடங்குகிறது.
Asus ROG Zephyrus Duo சீரீஸில், RTX 5070 Ti மாடலின் (GX651AR-SR074WS - RTX5070Ti) விலை ரூ.5,49,990-ல் தொடங்குகிறது. RTX 5090 (GX651AX-SR099WS - RTX5090) கொண்ட Asus Zephyrus Duo மாடலின் விலை ரூ.6,99,990-ல் தொடங்குகிறது. Asus ProArt PZ14 மாடலின் விலை ரூ.2,69,990-ல் தொடங்குகிறது. GeForce RTX 5060 GPU கொண்ட Asus TUF Gaming A14 மாடலின் ஆரம்ப விலை ரூ.1,99,990 ஆகும். அறிமுக சலுகையாக, மாதம் ரூ. 11,111 முதல் தொடங்கி 18 மாதங்கள் வரையிலான வட்டியற்ற தவணை முறை (no-cost EMI) சலுகையை வாடிக்கையாளர்களுக்கு ஆசஸ் வழங்குகிறது.
இந்த அனைத்து புதிய ஆசஸ் லேப்டாப்களின் கிடைக்கும்தன்மை ஆனது அந்தந்த மாடலை பொறுத்து மாறுபடும். சில குறிப்பிட்ட மாடல்கள் ROG ஸ்டோர்கள் மற்றும் Asus eShop-ல் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கின்றன. பெரும்பாலான மாடல்கள் பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
முன்னதாக அறிமுகமான ஆசஸ் க்ரோம்புக் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவைகளின் விலைகள்: சமீபத்தில் இந்தியாவில் ஆசஸ் நிறுவனத்தின் க்ரோம்புக் சிஎம்32 டிடாச்சபிள் (Chromebook CM32 Detachable), க்ரோம்புக் சிஎம்14 (Chromebook CM14) மற்றும் க்ரோம்புக் சிஎம்15 (Chromebook CM15) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன,.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஆசஸ் க்ரோம்புக் சிஎம்32 டிடாச்சபிள் (CM3206) மாடலின் ஆரம்ப விலை ரூ.37,990 ஆகும். ஆசஸ் க்ரோம்புக் சிஎம் (CM1405) மாடலின் விலை ரூ.26,990 இல் இருந்தும், க்ரோம்புக் சிஎம்15 (CM1505) மாடலின் விலை ரூ.28,990 இல் இருந்தும் தொடங்குகிறது. இந்த மூன்று மாடல்களும் ஆசஸ் இ-ஷாப் (Asus E-shop) மற்றும் அமேசான் (Amazon) வழியாக வாப்பிக கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications