Home
Gadgets

நான்-ஸ்டாப் மோட்-இல் Asus.. Intel Celeron ப்ராஸஸர் உடன் புது Chromebook லேப்டாப்கள் அறிமுகம்!

ஆசஸ் நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் (கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில்) அதன் ஜென்புக் (ZenBook), விவோபுக் (VivoBook) மற்றும் எக்ஸ்பர்ட்புக் (ExpertBook) சீரிஸின் கீழ் புதிய ஏஐ-பவர்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்நிறுவனம் அதன் க்ரோம்புக் (ChromeBook) சீரீஸின் கெயில் 4 புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

அவைகள் க்ரோம்புக் சிஎக்ஸ்14 (Chromebook CX14), க்ரோம்புக் சிஎக்ஸ்15 (Chromebook CX15), க்ரோம்புக் பிளஸ் சிஎக்ஸ்14 (Chromebook Plus CX14) மற்றும் க்ரோம்புக் பிளஸ் சிஎக்ஸ்15 (Chromebook CX15) மாடல்கள் ஆகும். இந்த லேப்டாப் மாடல்கள் இன்டல் கோர் 3 என்355 சிபியு-களால் (Intel Core 3 N355 CPU) இயக்கப்படுகின்றன மற்றும் 14-இன்ச் மற்றும் 15-இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Intel Celeron ப்ராஸஸர் உடன் புது Chromebook லேப்டாப்கள் அறிமுகம்!

ஆசஸ் க்ரோம்புக் சிஎக்ஸ்14, க்ரோம்புக் சிஎக்ஸ்15 மாடல்களின் முக்கிய அம்சங்கள்: க்ரோம்புக் சிஎக்ஸ்14 மாடல் ஆனது 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 45 சதவீதம் NTSC கலர் கேமட் கவரேஜ் உடனான 14.0-இன்ச் FHD IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள க்ரோம்புக் சிஎக்ஸ்15 மாடல் ஆனது அதே 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 45 சதவீதம் NTSC கலர் கேமட் கவரேஜ் உடனான 15.6-இன்ச் FHD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டு லேப்டாகளிலும் இன்டெல் செலரான் ப்ராசஸர் என்4500 உள்ளது. இது 8ஜிபி வரை LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை 256ஜிபி வரையிலான eMMC ஸ்டோரேஜை கொண்டுள்ளது. பாதுகாப்பு நோக்கங்களுக்காக, இவ்விரு மாடல்களிலும் டைட்டன் சி செக்யூரிட்டி சிப் உள்ளன.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஆசஸ் க்ரோம்புக் சிஎக்ஸ்14, க்ரோம்புக் சிஎக்ஸ்15 ஆகிய இரண்டுமே டிஸ்பிளே போர்ட் 1.2 ஆதரவுடன் டைப் சி போர்ட் கொண்ட யூஎஸ்பி 3.2 ஜென் 1, யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப் ஏ போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், கென்சிங்டன் லாக் மற்றும் பலவற்றை பெறுகின்றன. கடைசியாக இந்த லேப்டாப்கள் முறையே 42Wh மற்றும் 50Wh பேட்டரிகளுடன் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங்கையும் பெறுகின்றன.

க்ரோம்புக் பிளஸ் சிஎக்ஸ்14, க்ரோம்புக் பிளஸ் சிஎக்ஸ்15 மாடல்களின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு பிளஸ் மாடல்களுமே இன்டல் கோர் 3 என்355 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன. கூடவே இன்டல் UHD கிராபிக்ஸ், 16ஜிபி வரை LPDDR5 ரேம். 256ஜிபி வரை ஆன்-போர்டு eMMC ஸ்டோரேஜ், வைஃபை 6E, 12 மாத கூகுள் ஒன் ஏஐ பிரீமியம் பிளான், 2டிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஒருங்கிணைந்த ஏஐ டூல்கள் ஆகியவைகளை கொண்டுள்ளன.

ஆசஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் க்ரோம்புக் சிஎக்ஸ்14, க்ரோம்புக் சிஎக்ஸ்15, க்ரோம்புக் பிளஸ் சிஎக்ஸ்14 மற்றும் க்ரோம்புக் பிளஸ் சிஎக்ஸ்15 அணைத்து லேப்டாப் மாடல்களின் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை. அதுகுறித்த தகவல்கள் கிடைத்ததும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

முன்னதாக அறிமுகமான ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1, எக்ஸ்பர்ட்புக் பி3 மற்றும் எக்ஸ்பர்ட்புக் பி5 லேப்டாப் மாடல்களின் விலை விவரங்கள்: ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1, பி3 மற்றும் பி5 லேப்டாப் மாடல்கள் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது. இவைகள் முறையே ரூ.39,990, ரூ.64,990 மற்றும் ரூ.94,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

இதற்கும் முன்பாக ஆசஸ் நிறுவனம் 2 சக்திவாய்ந்த ஏஐ-பவர்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது: அவைகள் - ஆசஸ் ஜென்புக் ஏ14 (Asus Zenbook A14) மற்றும் ஆசஸ் விவோபுக் 16 (Asus Vivobook 16) மாடல்கள் ஆகும். ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் சிப்செட் உடன் வரும் ஆசஸ் ஜென்புக் ஏ14 வேரியண்ட்டின் விலை ரூ.1,29,990 என்றும், ஸ்னாப்டிராகன் எலைட் சிப்செட் உடன் வரும் ஆசஸ் ஜென்புக் ஏ14 வேரியண்ட்டின் விலை ரூ.99,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசஸ் விவோபுக் 16 மாடலின் விலை ரூ. 65,990 முதல் தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Asus New Intel Celeron processor Chromebook CX14 CX15 laptops Along with Plus Models Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X