ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?

|

ASUS நிறுவனம் தனது தயாரிப்பு வரிசையில் லேப்டாப், கேமிங் சாதனங்கள், ஸ்மார்ட்போன் மற்றும் கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்கள், மதர்போர்ட், கீபோர்ட், வெப் கேமரா, வைஃபை ரௌட்டர் என்று பல சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகிறது. கணினி தொடர்பான எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதை நீங்கள் Asus இடமிருந்து நம்பிக்கையுடன் வாங்கலாம்.

ASUS இன் புதிய மினிமலிஸ்ட் மவுஸ் டிவைஸ் அறிமுகம்

ASUS இன் புதிய மினிமலிஸ்ட் மவுஸ் டிவைஸ் அறிமுகம்

இப்போது, இந்த நம்பகமான நிறுவனம் MD100 ASUS மார்ஷ்மெல்லோ மவுஸ் என்ற புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களிடம் வயர்டு மவுஸ் இருந்தாலும் சரி, வயர்லெஸ் மவுஸ் இருந்தாலும் சரி, நிச்சயமாக இப்படி ஒரு மினிமலிஸ்ட் (minimalist) மவுஸ் இருந்தால் உங்கள் அனுபவம் இன்னும் சூப்பராக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய மவுஸ் டிவைஸை, என்ன விலையில் எங்கிருந்து வாங்கலாம்? என்று பார்க்கலாம்.

சூப்பர் கூல் தோற்றத்தில் புதிய Asus MD100 Marshmallow மவுஸ்

சூப்பர் கூல் தோற்றத்தில் புதிய Asus MD100 Marshmallow மவுஸ்

சந்தையில் விற்கப்படும் மற்ற மவுஸ் டிவைஸ்களில் இருந்து இது எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. அசுஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் சூப்பர் கூல் டிவைஸ் தான் இந்த Asus MD100 Marshmallow மவுஸ் சாதனம். இது இப்போது பல வண்ண விருப்பங்களில் வாங்கக் கிடைக்கிறது. இந்த மவுஸின் முக்கிய சிறப்பம்சமே இதன் மினிமலிஸ்ட் வடிவமைப்பு தான்.

உங்கள் விருப்பத்திற்கேற்ப மவுஸின் கலர்களை மாற்றலாமா?

உங்கள் விருப்பத்திற்கேற்ப மவுஸின் கலர்களை மாற்றலாமா?

இந்த மினிமலிஸ்ட் டிசைனை பார்த்ததும் நமக்கு இதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த டிவைஸில் இதுமட்டும் ஸ்பெஷல் இல்லை, இன்னும் ஏராளமாக இருக்கிறது. இது மிகவும் அமைதியாகச் சத்தமில்லாமல் செயல்படுகிறது. தினசரி வேலை பார்ப்பவர்களின் கரங்களுக்கு ஏற்ற விதத்தில் சாஃப்ட் டச் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மவுஸின் கலர்களை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றக் கூடிய அம்சமும் இதில் உள்ளது.

IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?

மேக்னெட்டிக் அட்டாச் கவர்களுடன் ஏராளமான அம்சம்

மேக்னெட்டிக் அட்டாச் கவர்களுடன் ஏராளமான அம்சம்

இந்த மவுஸ் இப்போது கொயட் ப்ளூ, லிலியாக் மிஸ்ட் பர்பிள் போன்ற வண்ணத் தொகுப்புகளில் வருகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள டாப் கவர்கள் அனைத்தும் மேக்னெட்டிக் அட்டாச் கவர்கள் என்பதனால் இவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இந்த மவுஸ் தனித்துவமான மவுஸ் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இது பயணத்தின்போது வேலை செய்ய விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பாகச் சேமித்து எடுத்துச் செல்வதை எளிதாக்குகிறது.

கிளிக் சத்தமே வராதா? 3 மடங்கு ஆயுட்காலமா?

கிளிக் சத்தமே வராதா? 3 மடங்கு ஆயுட்காலமா?

இந்த Asus MD100 Marshmallow மவுஸ் வழக்கமான அலுவலக மவுஸை விட மூன்று மடங்குக்கும் அதிகமான ஆயுட்காலம் கொண்டது மற்றும் வலுவானது என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒரு AA பேட்டரி மூலம் இதை நீங்கள் தடையின்றி ஒரு வருடத்திற்கும் மேலாக இயக்கலாம் என்று ASUS கூறியுள்ளது. இதன் கிளிக் சவுண்ட் 20 டெசிபல்களுக்கும் குறைவான சத்தத்தைக் கொண்டுள்ளது. இந்த மவுஸ் 10 மில்லியன் கிளிக்குகளுக்கு மேல் நீடிக்கக்கூடியது.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

ஸ்மூத் பயன்பாடுடன் ஆன்டிபாக்டீரியல் கார்ட் பாதுகாப்பு

ஸ்மூத் பயன்பாடுடன் ஆன்டிபாக்டீரியல் கார்ட் பாதுகாப்பு

மவுஸின் அடித்தளம் முழுக்க முழுக்க PTFE இனால் ஆனது, இது கரடுமுரடான பரப்புகளில் சிரமமின்றி இயக்கத்தை உறுதி செய்கிறது. மறுபுறம், இந்த மவுஸின் மேற்பரப்பு ஆன்டிபாக்டீரியல் கார்ட் (Antibacterial Guard) மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது, இது 24 மணி நேர காலப்பகுதியில் கிருமிகளின் வளர்ச்சியை 99 சதவீதத்திற்கும் அதிகமாகக் கட்டுப்படுத்தி, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ASUS MD100 மார்ஷ்மெல்லோ மவுஸ் விலை என்ன?

ASUS MD100 மார்ஷ்மெல்லோ மவுஸ் விலை என்ன?

இந்த MD100 மார்ஷ்மெல்லோ மவுஸ் 2.4GHz மற்றும் புளூடூத் இரண்டையும் ஆதரிக்கும் டூயல் மோட் இணைப்பை வழங்குகிறது. இந்த மவுஸ் டிவைஸ் இப்போது ரூ. 1499 என்ற விலையில் Flipkart மற்றும் ASUS E-shop வழியாக வாங்கக் கிடைக்கிறது. அதே போல் AES மற்றும் ROG ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. கூலான டிஸைனுடன், ஸ்மூத்தான அனுபவத்தைப் பெற இந்த மினிமலிஸ்ட் மவுஸை உடனே வாங்குங்கள்.

Best Mobiles in India

English summary
ASUS MD100 Marshmallow Mouse launched in India Know The Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X