முன்பதிவை துவங்கிய அசுஸ் லைரா டிரியோ மெஸ் வைஃபை சிஸ்டம்.!

அமெரிக்காவில் அசுஸ் லைரா டிரியோவின் முன்பதிவை அமேசான் துவங்கிய நிலையில், மே மாத துவக்கத்தில் விநியோகிக்கப்படலாம்

|

கடந்த ஜனவரியில் நடைபெற்ற CES2018ல் அசுஸ் அறிமுகப்படுத்திய லைரா டிரியோ மெஸ் வைஃபை சிஸ்டத்திற்கான முன்பதிவை துவங்கியுள்ளது அசுஸ். கடந்தாண்டு வெளியான ஆசுஸ் லைராவின் அடுத்த வெளியீடாக வரும் இந்த புதிய மெஸ் வைஃபை சிஸ்டத்தின் விலை 299.99 டாலராக(சுமார் ரூ19,900) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவை துவங்கிய அசுஸ் லைரா டிரியோ மெஸ் வைஃபை சிஸ்டம்.!


அமெரிக்காவில் அசுஸ் லைரா டிரியோவின் முன்பதிவை அமேசான் துவங்கிய நிலையில், மே மாத துவக்கத்தில் விநியோகிக்கப்படலாம். மற்ற பகுதிகளில் எப்போது முன்பதிவு துவங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.

3×3 MIMO தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இதில் டூயல் ஃபேண்டு,ட்ரை-ஹப் மெஸ் வைஃபை சிஸ்டம் மற்றும் தனித்துவ பிரமீடு வடிவில் உள்ளது. இதில் உள்ள சிறப்புதன்மை வாய்ந்த ஆண்டானா மூலம் வைஃபை சிக்னல்களை எந்த இடையூறும் இன்றி கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் பெற முடியும் என்றும், 5,400சதுர அடி பல அடுக்குமாடி வீடுகளில் கூட செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்கிறது ஆசுஸ்.

ஒரு சீராக இல்லாத கட்டிடத்தின் சூழலில் , லைரா டிரியோவின் அனைத்து மையங்களையும் ஒன்றிணைத்து ஒரு வலையமைபின் கீழ் ஒரு வைஃபை பெயரின் கீழ் கொண்டு வருகிறது. இந்த சிஸ்டம் தானாகவே பயனர்கள் அங்கும் இங்கும் நகரும் போது நல்ல சிக்னல் கிடைக்கும் ஒரு மையத்துடன் இணைப்பை ஏற்படுத்தி சிறப்பான அனுபவத்தை தருகிறது. பல்வேறு ரூட்டர்கள் அல்லது சுவிட்கள் உள்ள சிஸ்டம் அல்லது வைஃபை விரிவாக்கியை விட ஏன் ஒருவர் மெஸ் வைஃபை யை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு காரணம் இது தான்.

2×2 ஐ விட 3×3 MIMO தொழில்நுட்பம் உள்ள லைரா டிரியோ அதிக அலைவரிசையை தருவதால், எவ்வளவு நெட்வொர்க் டிராப்பிக்கையும் தாங்கும்.

அசுஸ் நிறுவனம் டிரென்ட் மைக்ரோ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, இணைக்கப்பட்ட அனைத்து கருவிகளுக்கும் இடையை பாதுகாப்பான தரவு பகிர்தலை தருகிறது.

முன்பதிவை துவங்கிய அசுஸ் லைரா டிரியோ மெஸ் வைஃபை சிஸ்டம்.!


மேலும் அசுஸ் வெளியிட்டுள்ள லைரா செயலியின் மூலம் இலவச கணிணி செட்அப், கெஸ்ட் வைஃபை ஷேரிங், நேர திட்டமிடல் மற்றும் நெர்வொர்க் பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

4,500 சதுர அடிவரை இயங்கும் கூகுள் வைஃபை-க்கு அசுஸ் லைரா டிரியோ வலுவான போட்டியாக இருக்கும். 2×2MIMO ஆண்டனா தொழில்நுட்பம் மற்றும் 3 மையங்கள் (hub) உள்ள கூகுள் வைஃபை விலை $299(சுமார் ரூ19,800). நெட்கியர் நிறுவனம் கடந்த செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஓர்பி சீரிஸ் மெஸ் வைஃபை சிஸ்டம் 5000 சதுர அடி வரை இயங்கும்.

Best Mobiles in India

English summary
Asus Lyra Trio Mesh Wi-Fi System With 3x3 MIMO Tech Now Available for Pre-Orders ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X