ரூ.18,990 க்கு Asus-ன் புது Laptop.. 1.39 கிலோ, 14-இன்ச் FHD, 8GB ரேம், Google அசிஸ்டண்ட், 42Wh பேட்டரி!
டிஜிட்டல் லேர்னிங் (Digital learning) மற்றும் ப்ரொடெக்டிவிட்டியை (Productivity) மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை குறிவைத்து ஆசஸ் (Asus) நிறுவனம் ஆனது இந்திய சந்தையில் ஒரு புதிய க்ரோம்புக் லேப்டாப்பை (New Chromebook Laptop) அறிமுகம் செய்துள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
என்ன மாடல்? ஆசஸ் நிறுவனம் அதன் க்ரோம்புக் சிஎக்ஸ் 14 (Asus Chromebook CX14) லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது தேய்மானத்தை எதிர்க்கும் பினிஷ் (wear-resistant finish) மற்றும் அமெரிக்க இராணுவ தர கடினத்தன்மை (U.S. military-grade toughness) உடன் வரும் இந்த லேப்டாப் ஆனது அன்றாட தேவைக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடுவது போலவே க்ரோம்புக் சிஎக்ஸ் 14 லேப்டாப் மாடல் ஆனது க்ரோம்ஓஎஸ் (ChromeOS) கொண்டு இயங்குவதால், கூகுள் வொர்க்ஸ்பேஸுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு, ஆட்டோமெட்டிக் அப்டேட்கள் மற்றும் பில்ட்-இன் செக்யூரிட்டி ஆகியவற்றை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக பட்ஜெட் விலையி மென்மையான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை உறுதியளிக்கிறது.
ஆசஸ் க்ரோம்புக் சிஎக்ஸ் 14 லேப்டாப் மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 14-இன்ச் FHD டிஸ்பிளே
- TN அல்லது VIPS பேனல் விருப்பங்கள்
- ஆன்டி-க்ளேர் பினிஷ்
- 300 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ் லெவல்கள்
- இன்டெல் UHD கிராபிக்ஸ்
- இன்டெல் செலரான் N4500 ப்ராசஸர்
- 8ஜிபி LPDDR4X ரேம்
- 64GB அல்லது 128GB eMMC ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- 100ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் ஆதரவு
- கஸ்டம் ஷட்டர்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- கூகுள் அசிஸ்டண்ட்டை ஆதரிக்கும் டூயல் மைக்ரோஃபோன்ஸ்
- FHD வெப்கேம்
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.4
- யூஎஸ்பி டைப்-சி
- யூஎஸ்பி டைப்-ஏ
- எச்டிஎம்ஐ (HDMI)
- கென்சிங்டன் லாக்

- டைட்டன் சி சிப் ப்ரொடெக்ஷன்
- 42Wh பேட்டரி
- எடையில் 1.39 கிலோ
- அமெரிக்க இராணுவ தர நீடித்துழைப்பு
- 180 டிகிரி கீல்
- தேய்மானத்தை எதிர்க்கும் பினிஷ்
- மேம்பட்ட சிராய்ப்பு எதிர்ப்பிற்கான டயமண்ட் மற்றும் ஸ்டோன் பவுடர் உடனான கரடுமுரடான கட்டமைப்பு
இந்தியாவில் ஆசஸ் க்ரோம்புக் சிஎக்ஸ் 14 லேப்டாப் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஆசஸ் க்ரோம்புக் சிஎக்ஸ் 14 லேப்டாப் ஆனது இப்போது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இரண்டு வேரியண்ட்களில் வாங்க கிடைக்கிறது. CX1405CKA-NK0154 மாடலின் விலை ரூ.18,990 ஆகும்.
அதே நேரத்தில் CX1405CKA-NK0155 மாடலின் விலை ரூ.20,990 ஆகும். மூன்றாவது வேரியண்ட் ஆன CX1405CKA-S60394 விரைவில் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசஸ் இ-ஷாப் (Asus e-Shop) தளத்தையும் அணுகலாம்.
நினைவூட்டும் வண்ணம் கடந்த மே மாதம் நடந்த கம்ப்யுடெக்ஸ் 2025 (Computex 2025) நிகழ்வில் ஆசஸ் (Asus) நிறுவனம், அதன் எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸின் (ExpertBook P3 Series) கீழ் 2 புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்திருந்தது/ இந்த சீரிஸில் 14-இன்ச் மற்றும் 16-இன்ச் டிஸ்பிளேக்கள் கொண்ட 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆசஸ் நிறுவனத்தின் இந்த புதிய எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸ் ஆனது ஏஎம்டி ரைஸன் ஏஐ 7 350 ப்ராசஸர் (AMD Ryzen AI 7 350 Processor) பொருத்தப்பட்டுள்ளது. இது 32ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 மாடல்களும் வின்டோஸ் ஹலோ (Windows Hello) வழியாக பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஆதரவுடன் 1080பி கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்கள் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டில் 65W இல் சார்ஜ் செய்யக்கூடிய 70Wh லித்தியம் பாலிமர் பேட்டரியை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications