அடிச்சான் பாரு ASUS.. பட்ஜெட்ல 15.6 இன்ச் டிஸ்பிளே.. N50 ப்ராசஸர்.. புது Chromebook லேப்டாப்.. எந்த மாடல்?
ஆபீஸ் தேவைக்காக லேப்டாப் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்காகவே பக்காவான பீச்சர்களுடன் ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 (ASUS Chromebook CX15) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 15.6 இன்ச் ஆன்டி-கிளார் டிஸ்பிளே, இன்டல் என்50 ப்ராசஸர் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.
இந்தியாவில் பட்ஜெட் விலைக்கு கிடைக்கும் லேப்டாப்களில் ஆசஸ் நிறுவனத்தின் மாடல்கள் தனி வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் குரோம்புக் மாடல்களால் கூகுள் நிறுவனத்தின் ஏஐ பீச்சர்களுடன் கிடைப்பதால், ஆபீஸ் தேவைக்கான பக்காவான மாடல்களாக இருக்கின்றன. இப்போது, குரோம்புக் சிஎக்ஸ்15 வந்துள்ளது.

ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 அம்சங்கள் (ASUS Chromebook CX15 Specifications): 15.6 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் நானோஎட்ஜ் (IPS NanoEdge) டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 இருக்கிறது. ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், ஆன்டி-கிளார் (Anti-glare) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி இன்டல் ப்ராசஸர் என்50 (Intel Processor N50) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்டல் யூஎச்டி கிராபிக்ஸ் (Intel UHD Graphics) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமர கொடுத்துள்ளது. குரோம்ஓஎஸ் (ChromeOS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, கூகுள் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.
இதில் 3 மாதங்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) மெம்பர்ஷிப் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஜெமினி (Gemini), கூகுள் ப்ளோவ் (Google Flow), கூகுள் போட்டோஸ் (Google Photos) உள்ளிட்டவையில் பிரீமியம் அணுகல்கள் கிடைக்கும். ஏஐ எடிட்டிங் (AI Editing), நானோ பனானா (Nano Banana) போன்ற அணுகல்களும் இதில் அடங்கும்.
இதுபோக யூடியூப் பிரீமியம் லைட் (YouTube Premium Lite) சந்தாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணுகல்கள் போக 5 டிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதுவும் கூகுள் ஏஐ ப்ரோ மெம்பர்ஷிப்பில் அடங்கும். 12.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரியை இந்த ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 கொடுத்து இருக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. செக்யூரிட்டி பீச்சர்களை பொறுத்தவரையில், டைட்டன் சி செக்யூரிட்டி சிப் (Titan C Security Chip) கிடைக்கிறது. குரோம்ஓஎஸ் வழியாக ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிசிகல் வெப்கேம் ஷட்டர் கிடைக்கிறது.
எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்15 கிடைக்கிறது. 1.59 கிலோ எடை கொண்டுள்ளது. ப்யூர் கிரே (Pure Grey) கலரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ரூ.47,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆசஸ் ஸ்டோர்கள், ஆசஸ் ஈ-ஷாப் உள்ளிட்டவற்றில் வாங்கி கொள்ளலாம்.
குரோம்புக் மாடல்களில் கூகுள் நிறுவனத்தின் ஏஐ அசிஸ்டன்ட் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருப்பதால், கூகுள் டாக்ஸ், சீட்ஸ் உள்ளிட்டவற்றை அணுக எளிதாக இருக்கும். அதேபோல ஈமெயில், டிரைவ் ஆகியவற்றில் அதிகப்படியான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications