Home
Gadgets

அம்புட்டு இந்தியாவும் வாங்கும்.. கனவுல கூட நினைக்காத விலைக்கு ASUS 2-இன்-1 லேப்டாப் அறிமுகம்.. ஜூன்.19 SALE!

ஆசஸ் (Asus) நிறுவனம் இந்தியாவில் 3 புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது. அவைகள் க்ரோம்புக் சிஎம்32 டிடாச்சபிள் (Chromebook CM32 Detachable), க்ரோம்புக் சிஎம்14 (Chromebook CM14) மற்றும் க்ரோம்புக் சிஎம்15 (Chromebook CM15) ஆகிய மாடல்கள் ஆகும்.

ஆசஸ் க்ரோம்புக் சிஎம்32 டிடாச்சபிள் லேப்டாப் மாடலின் அம்சங்கள்:
- லேப்டாப் (laptop) மற்றும் டேப்லெட் (tablet) என இரு விதங்களிலும் பயன்படுத்தக்கூடிய 2-இன்-1 டிவைஸ்
- க்ரோம்ஓஎஸ்
- 16:10 ரேஷியோ உடன் கூடிய 12.1-இன்ச் 2.5கே (2,560×1,600 ரெசல்யூஷன்) டச் ஸ்க்ரீன்
- 600நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 98 சதவீத DCI-P3 கலர் கேமட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

கனவுல கூட நினைக்காத விலைக்கு ASUS 2-இன்-1 லேப்டாப் அறிமுகம்!

- ஸ்டைலஸ் (stylus) ஆதரவு
- 87 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- மீடியாடெக் Kompanio 540 ப்ராசஸர்
- ஏஆர்எம் மாலி-G57 MC2 கிராபிக்ஸ்
- 8GB வரையிலான LPDDR5x ரேம்
- 128GB வரையிலான eMMC ஸ்டோரேஜ்
- MIL-STD-810H இராணுவத் தரத்திலான உறுதியான கட்டமைப்பு
- 5 மெகாபிக்சல் ரியர் கேமரா
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- USB Type-C போர்ட், மைக்ரோஃபோன், Wi-Fi 6 மற்றும் Bluetooth 5.4 ஆதரவு
- 1.35மிமீ கீ டிராவல் (key travel) மற்றும் ஒருங்கிணைந்த டச்பேட் (touchpad)
- கழற்றக்கூடிய கீபோர்ட் (detachable keyboard)
- 42Wh திறன் கொண்ட டூ-செல் (two-cell) லித்தியம்-பாலிமர் பேட்டரி
- ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை செயல்படும்
- 45W பவர் அடாப்டர்

ஆசஸ் க்ரோம்புக் சிஎம்14 மற்றும் சிஎம்15 லேப்டாப் மாடல்களின் அம்சங்கள்:
- க்ரோம்ஓஎஸ் மற்றும் MIL-STD 810H தரத்திலான உறுதியான கட்டமைப்பு
- 180 டிகிரி வரை பிளாட் ஆக விரிக்கக்கூடிய கீல் (hinge) வடிவமைப்பு
- மீடியாடெக்Kompanio 540 ப்ராசஸர் மற்றும் ARM Mali-G57 MC2 கிராபிக்ஸ்
- 8GB வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 256GB வரையிலான eMMC ஸ்டோரேஜ்

- சிஎம்15 மாடலானது, 16:9 ரேஷியோ மற்றும் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்ட 15.6-அங்குல FHD (1,920×1,080 பிக்சல்ஸ்) டச்ஸ்க்ரீன் மற்றும் நான்-ட்ச் (non-touch) டிஸ்பிளேவை கொண்டுள்ளது
- சிஎம்14 மாடலானது 16:9 ரேஷியோ மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 14-இன்ச் FHD டச்ஸ்க்ரீன் மற்றும் நான்-ட்ச் (non-touch) டிஸ்பிளேவை கொண்டுள்ளது
- சிஎம்15 மாடலில் 63Wh வரையிலான பேட்டரி உள்ளது
- சிஎம்14 மாடலில் 50Wh வரையிலான பேட்டரி உள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஆசஸ் க்ரோம்புக் சிஎம்32 டிடாச்சபிள் (CM3206) மாடலின் ஆரம்ப விலை ரூ.37,990 ஆகும். ஆசஸ் க்ரோம்புக் சிஎம் (CM1405) மாடலின் விலை ரூ.26,990 இல் இருந்தும், க்ரோம்புக் சிஎம்15 (CM1505) மாடலின் விலை ரூ.28,990 இல் இருந்தும் தொடங்குகிறது.

இந்த மூன்று மாடல்களும் ஜூன் 19 அன்று ஆசஸ் இ-ஷாப் (Asus E-shop) மற்றும் அமேசான் (Amazon) வழியாக விற்பனைக்கு வரவுள்ளன. ஆசஸ் க்ரோம்புக் சிஎம்32 டிடாச்சபிள் மாடல் ஆனது தற்போது முன்பதிவுக்காக கிடைக்கிறது. க்ரோம்புக் சிஎம்14 மற்றும் சிஎம்15 ஆகியவை ஜூன் 19 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். இந்த க்ரோம்புக் மாடல்களை வாங்குபவர்களுக்கு, கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) சலுகைகள் மற்றும் மூன்று மாதங்களுக்கு 5டிபி கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) வசதியையும் ஆசஸ் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Asus Chromebook CM32 Detachable 2 in 1 Laptop and CM14 CM15 Model India Price Specifications Sale June 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X