Home
Gadgets

அட கடவுளே.. சிங்கத்தின் நாக்கில் Apple வாட்ச் பொருத்தும் மருத்துவர்கள்.. எதற்காக தெரியுமா?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஒரு தலைசிறந்த ஸ்மார்ட் வியர்ரபில் கேட்ஜெட் (Smart Wearable Gadget) சாதனமாக அதன் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) சாதனம் திகழ்கிறது. ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் இப்போது மனிதர்களுக்கு (Humans) மட்டுமின்றி, விலங்குகளுக்கும் (Animals) பெரியளவில் உதவ துவங்கியுள்ளன. இதனால், ஆப்பிள் வாட்ச் சாதனங்கள் இப்போது சிங்கத்தின் நாக்கு (Lion's Tongue) வரை சென்று தஞ்சமடைந்துள்ளது. ஆம், மக்களே சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்ச் பொருத்தப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.

''முதலை வாயில் இருந்து தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்டதாக'' தமிழில் ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழி இப்போது நிஜமாகிவிட்டது போல தெரிகிறது. மனிதர்களின் கரங்களில் (human hands) மாட்டப்படும் ஒரு ஸ்மார்ட்வாட்ச் கேட்ஜெட் (smartwatch gadget) சாதனமாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் டிவைஸ் இப்போது விலங்குகளின் பல உறுப்புகளில் மாட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

அட கடவுளே.. சிங்கத்தின் நாக்கில் Apple வாட்ச் பொருத்தும் மருத்துவர்கள்

சிங்கத்தின் நாக்கு, யானையின் காதுகளில் Apple Watch பொருத்தும் மருத்துவர்கள்:

இதற்கு ஆப்பிள் வாட்சில் உள்ள ஹார்ட் ரேட் மானிட்டரின் அம்சம் (heart rate monitoring feature) தான் ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் உள்ள ஹார்ட் ரேட் மானிட்டரிங் அம்சம் மனிதர்களின் இதய துடிப்பை (human heart rate) துல்லியமான கண்காணிப்பதை தாண்டி, இப்போது விலங்குகளின் இதய துடிப்பையும் (animals heart rate) மிகவும் துல்லியமாக கண்காணிக்கிறதென்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கால்நடை மருத்துவர்கள் (veterinary doctors) இப்போது பல விலங்குகளில் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர். குறிப்பாக, ஆப்பிள் வாட்ச் சாதனங்களை கால்நடை மருத்துவர்கள் இப்போது சிங்கத்தின் நாக்கு (Apple watch on lion's tongue), யானையின் காது (elephant ear) என்று பல உறுப்புகளில் மாட்டி பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது என்ன வினோதமாக இருக்கிறது?

இதற்கு பதிலாக விலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவ இதய துடிப்பு கண்காணிப்பு சாதனங்களை (Medical heart rate monitoring devices) பயன்படுத்தலாமே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இதற்கு மருத்துவர்களிடம் இருந்து ஒரு நிதர்சனமான பதில் உள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இதய துடிப்பு கண்காணிப்பு சாதனங்கள் அளவில் பெரியவையாக இருக்கின்றன. அதேபோல், அவற்றை காட்டிற்குள் (Forest) எடுத்து செல்வது கடினமாக இருக்கிறது.

சிங்கத்தில் நாக்கில் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த காரணம் என்ன?

அவற்றை விலங்குகளின் நாடி துடிப்பு உறுப்புகளில் பொருத்தவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், ஆப்பிள் வாட்ச் கைக்கு அடக்கமாக இருக்கிறது. இன்னும் சரியாக சொல்ல போனால், மருத்துவர்களின் கையிலேயே இருக்கிறது. விலங்குகளின் உறுப்புகளில் ஸ்ட்ராப் (strap) செய்ய மிகவும் தோதாக இருக்கிறது. அதேபோல், இதன் துல்லியம் மருத்தவ சாதனங்களுக்கு நிகராக இருப்பதினால், மருத்துவர்கள் இப்போது ஆப்பிள் வாட்ச் சாதனங்களை விலங்குகளுக்கு (Apple Watch devices for animals) பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இப்படி சமீபத்தில் ஒரு மருத்துவர் சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்சை பொருத்தி அதன் இதய துடிப்பை கண்காணித்துக்கொண்டே அதற்கு சிகிச்சை வழங்கியிருக்கிறார். சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்ச் (Apple Watch On Lion Tongue) பொருத்தப்பட்டு, சிங்கத்தின் இதய துடிப்பு கண்காணிக்கப்படும் இன்ஸ்டாகிராம் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலிய வனவிலங்கு கால்நடை மருத்துவர் (Australian wildlife veterinarian) டாக்டர் ச்லோ புய்ட்டிங் (Dr. Chloe Buiting) தான் சிங்கத்தின் நாவில் ஆப்பிள் வாட்ச் மாட்டி இதய துடிப்பை கண்காணித்திருக்கிறார். ஆனால், சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்ச் பொருத்தி இதய துடிப்பை கண்காணிக்க முடியுமென்ற வித்தையை முதலில் கண்டுபிடித்தவர்கள் டாக்டர். ஃபேபியோலா கியூசாடா மற்றும் டாக்டர். பிரெண்டன் டிண்டால் என்பது குறிப்பிடத்தக்கது. இரவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மக்களின் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Watch Wrapped Around Lion Tongue By Australian wildlife veterinarian Doctor To Monitor Hear Rate Went Viral
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X