தரமான அம்சங்களுடன் வெளிவரும் எதிர்கால ஆப்பிள் வாட்ச்.!
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது.

ஆப்பிள் நிறுவனம்
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்சின் எதிர்கால மேம்பாடுகள் குறித்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை ஆப்பிள் வாட்ச் மாடலில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உடல் வெப்பநிலை மற்றும் இரத்த சர்க்கரையை கண்காணிக்க சென்சார்கள் உட்பட பல்வேறு வசதிகள் ஆப்பிள் வாட்ச் மாடலில் இடம்பெறும் என ப்ளூம்பெர்க் தகவல்வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7
ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலில் faster பிராசஸர், மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் இணைப்பு, தரமான மெல்லிய டிஸ்பிளே என பல்வேறு அமசங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இனிவரும் ஆப்பிள் வாட்ச் மாடலில்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உடல் வெப்பநிலை கண்டறிதல்
இனி வரும் ஆப்பிள் வாட்ச் மாடலில் உடல் வெப்பநிலை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. அதேசமயம் மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்களை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச். ஆப்பிள் நிறுவனம் WWDC 2021 மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நிகழ்வைத் துவக்கி வைத்து புதிய ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, பிரைவசி ப்ரோடெக்ஷன், மேக் ஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் 8 போன்ற பல அம்சங்கள் பற்றி அறிமுகம் செய்து நிகழ்வைச் சிறப்பாக்கினார்.

வாட்ச் ஒஎஸ் 8 இல் என்ன-என்ன புதிய மாற்றங்கள் வந்துள்ளது?
புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும், பயனர்களின் மனநிலையை நிலையாய் வைத்துக் கொள்ளவும் இந்த அம்சம் உதவுகிறது.

வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்காக வாட்ச் பேஸ் அம்சத்திலும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சாதனத்தின் வாட்ச் பேஸ் அம்சத்திற்கு புது ஒஎஸ் தளம் மாற்றப்பட்டுள்ளது. இது உண்மையில் ஆப்பிள் பயனர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. புதிய அம்சத்தின் படி, ஆப்பிள் வாட்ச் பேஸ் முன்பைவிட அதிக விவரங்களைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. புதிதாக போட்டோஸ் ஆப் மற்றும் மெசேஜ்ஜிங் வசதியில் சில அருமையான மாற்றங்களை நிறுவனம்
மேற்கொண்டுள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் தனித்துவமான அம்சங்கள் இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications