Apple ஒரே போடு.. OLED டிஸ்பிளே.. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்.. 64GB மெமரி.. எந்த மாடல்?
ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 (Apple Watch Ultra 4) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எஸ்11 சிப்செட், வாட்ச்ஓஎஸ் 27, ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட அப்கிரேடட் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் இருக்கிறது. 100 மீட்டர்கள் ஆழம் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து இருக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் டஸ்ட் புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. முந்தைய மாடல்களைவிட பேட்டரியில் கூடுதல் பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 அம்சங்கள் (Apple Watch Ultra 4 Specifications): கிரேடு 5 (Grade 5), டைட்டானியம் கேஸ் (Titanium Case) கொடுத்துள்ளது. நேச்சுரல் (Natural) மற்றும் பிளாக் (Black) கலர்களில் கிடைக்க இருக்கிறது. 422 x 514 பிக்சல்களை கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ஆல்வேஸ் ஆன் ரெடினா டிஸ்பிளேவுக்கு 1Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode) உள்ளது. டூயல் கோர் எஸ்11 (Dual Core S11) சிப்செட் மற்றும் 4 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) கிடைக்கிறது. 64 ஜிபி மெமரி உள்ளது. வாட்ச்ஓஎஸ் 27 கிடைக்கிறது. கன்ட்ரோல்களை பார்க்கையில், கஸ்டமைசபிள் ஆக்சன் பட்டன் (Customizable Action Button), டிஜிட்டல் கிரவுண் (Digital Crown) உள்ளது.
மேலும், சைடு பட்டன், சிங்கிள் டேப், டபுள் டோப் உள்ளது. ஆப்பிள் இன்டலிஜென்ஸ், சிரி கன்ட்ரோல் கிடைக்கிறது. மேலும், ஆடியோ இன்டலிஜென்ஸ் உள்ளது. இதில் லைவ் ரீவைண்ட் (Live Rewind), சிரி ரீகேப் (Siri Recap), ஷசாம் (Shazam) மற்றும் சவுண்ட் ரிககனைசேஷன் (Sound Recognition) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
3ஆவது ஜெனரேஷன் எலக்ட்ரிகல் ஹார்ட் சென்சார், ஆல்வேஸ்-ஆன் ஆப்டிகல் ஹார்ட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் சென்சார், 3 டெம்ப்ரேச்சர் சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சென்சார்கள் வழியாக பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஹார்ட் ரேட் ஆப், ஈசிஜி ஆப், ரிகவரி எச்ஆர்வி, விட்டல்ஸ் ஆப், அட்வான்ஸ்டு சைக்கிள் டிராக்கிங் ஆப் உள்ளிட்ட பல்வேறு ஹெல்த் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி/எல்இடி கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், வை-பை 4, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
லோவ் பவர் மோடில் 84 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 18 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். 45 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 சதவீத பேட்டரி பேக்கப் கிடைக்கும். எமர்ஜென்சி எஸ்ஓஎஸ், கிராஷ், ஃபால் டிடெக்சன், சைரன் உள்ளிட்ட சேப்டி பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
IP6X டஸ்ட் ரேட்டிங் கிடைக்கிறது. அல்பைன் லூப், டிரெயில் லூப் மற்றும் ஓசன் பேண்ட் வெர்ஷன்களின் விலை ரூ.1,09,900ஆக இருக்கிறது. டைட்டானியம் மிலானீஸ் லூப் வெர்ஷனின் விலை ரூ. 1,24,900 ஆக இருக்கிறது. இப்போது, ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications
