வாங்குனா இந்த ஆப்பிள் வாட்ச் வாங்கனும்.. சாட்டிலைட் கனெக்டிவிட்டி.. LTPO3 டிஸ்பிளே.. எந்த மாடல்?
இன்று நடைபெறும் Awe Dropping நிகழ்வில் ஐபோக் 17 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இந்த நிகழ்வில் மிகவும் அதிக எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3) மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளியாகும்
இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 அம்சங்கள் (Apple Watch Ultra 3 Specifications): பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தபடி 422 x 514 பிக்சல்ஸ் ஆதரவு மற்றும் 40 சதவீதம் பீக் பிரைட்னஸ் வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பின்பு LTPO3 டிஸ்பிளே உடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் 2 மாடலில் எஸ்9 சிப் வசதி இருந்தது. ஆனால் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் ஆனது எஸ்11 சிப் உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப் வசதி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்
வைஃபை அல்லது நெட்வொர்க் கவரேஜ் கிடைக்காதபோது செயற்கைக்கோள் அடிப்படையிலான குறுஞ்செய்தி மற்றும் அவசரகால SOS ஐ செயல்படுத்துகிறது இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல். குறிப்பாக அவசரக் காலங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracking), ஸ்லீப் மானிட்டர், (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), பீரியட் சைக்கிள் மானிட்டர் (Period Cycle Monitor) ஹெல்த் ஆகிய மானிட்டர்கள் (Health Monitors) உடன் இந்த புதிய சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஹாட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) போன்ற சுகாதார கண்காணிப்பு அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன.
சாட்டிலைட் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், ஏஐ அம்சங்கள், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடலில் உள்ளன. பின்பு 2 நாட்கள் வரை இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இதில் லோ பவர் மோட் ஆன் செய்தால் 72 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் ஆனது $799 (இந்திய மதிப்பில் ரூ.70,338) விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications