Home
Gadgets

அதிரவிடும் விலை.. Apple வாட்ச் அல்ட்ரா 3 அறிமுகம்.. OLED டிஸ்பிளே.. சாட்டிலைட் SOS.. எப்போது விற்பனை?

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இப்போது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 அம்சங்கள் (Apple Watch Ultra 3 Specifications): LTPO3 ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 422×514 பிக்சல்ஸ், ஆல்வேஸ்-ஆன், 3000 நிட்ஸ் பிரைட்னஸ், நைட் மோட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதேபோல் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

Apple வாட்ச் அல்ட்ரா 3 அறிமுகம்.. எப்போது விற்பனை?

எஸ்10 டூயல் கோர் சிப்செட் மற்றும் 4-கோர் நியூரல் எஞ்சின் (4-core Neural Engine) ஆதரவும் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 சாதனத்தில் உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்ட சிப் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த அப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் வெளிவந்துள்ளது.

ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர், டெம்பரேச்சர் சென்சார், ஆல்டிமீட்டர், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகள் இந்த அப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடலில் உள்ளன. மேலும் இந்த சானத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஸ்லீப் ஸ்கோர் (sleep score) என்ற அம்சத்துடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஹைபர்டென்ஷன் அலெர்ட், ஈ.சி.ஜி, சைக்கிள் டிராக்கிங், ஹார்ட் ரேட் போன்ற பல உடல்நல அம்சங்கள் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன. 5ஜி/எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.3, அல்ட்ரா வைட்பேண்ட், என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடலில் உள்ளன.

வாட்ச்ஓஎஸ் 26 ( watchOS 26) மூலம் இந்த ஆப்பிள் வாட்ச் இயங்குகிறது. குறிப்பாக இதில் செய்திகளில் நேரடி மொழிபெயர்ப்பு, புதிய வாட்ச் பேஸ்கள் என பல அம்சங்கள் உள்ளன. அதேபோல் IP6X தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த சாதனம்.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல். மேலும் சாட்டிலைட் SOS அம்சம், பிளாஸ் லைட், சைரன், விபத்து கண்டறிதல் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Apple வாட்ச் அல்ட்ரா 3 அறிமுகம்.. எப்போது விற்பனை?

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மாடல் ஆனது 42 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். ஆனால் நீங்கள் லோ பவர்மோட் ஆன் செய்தால் 72 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு ஸ்மார்ட்வாட்ச் மாடலை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆல்பைன் லூப், டிரெயில் லூப் அல்லது ஓஷன் பேண்ட் ஸ்ட்ராப்கள் கொண்ட மாடல்களின் விலை ரூ.89,900 ஆகும். பின்பு இதன் டைட்டானியம் மிலனீஸ் லூப் வெர்சன் விலை ரூ.1,04,900. இதன் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. வரும் செப்டம்பர் 19 முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Watch Ultra 3 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X