Apple Watch Ultra 2 மறு உருவம்.. மூச்சுத்திணறல் டிடெக்சன்.. ஆஃப்லைன் மேப்ஸ்.. புது கலர்.. விலை எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வில் (Apple It's Glowtime Event) ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) மாடலானது, புதிய கலர் ஆப்ஷன் மற்றும் மூச்சுத்திணறல் டிடெக்சன், ஆஃப்லைன் மேப்ஸ், வாட்ச்ஓஎஸ் 11, 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளே, ஆப்பிள் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட பல்வேறு புதிய பீச்சர்களுடன் அப்கிரேட் செய்யப்பட்டு களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய வெர்ஷனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள் (Apple Watch Ultra 2 Specifications): இந்த புதிய வெர்ஷனில் சாடின் பிளாக் (Satin Black) கலர் வருகிறது. அதேபோல புது ஹிமெஸ் ஸ்ட்ராப் (Hemes Strap) மற்றும் டைட்டானியம் பக்கிள் (Titanium Buckle) கொண்டிருக்கிறது. அதேபோல டைட்டானியம் மிலனீஸ் லூப் பேண்ட் (Titanium Milanese Loop Band) வருகிறது.

இந்த வெர்ஷனில் வாட்ச்ஓஎஸ் 11 (watchOS 11) வருகிறது. இந்த ஓஎஸ் மூலம் ஜிபிஎஸ் அக்கியூரெட் மற்றும் பேட்டரி கன்சும்ப்ஷன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, லோவ் பவர் மோடில் 72 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். அதேபோல நார்மல் மோடில் 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆப்லைன் மேப்ஸ் (Offline Maps) வருகிறது.
மேலும், டிரெய்னிங் லோட் (Training Load) சப்போர்ட் உள்ளது. டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஸ்லீப் மூச்சுத்திணறல் டிடெக்சன் (Sleep apnea Detection) வருகிறது. அதேபோல ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான மொத்த பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. ஸ்விம்மர்களுக்கு ஓசோனிக்பிள் ஆப் (Oceanic+ App) சப்போர்ட் உள்ளது.
அதோபோல ஆட்டோமேட்டிக் ஸ்டோர்க் டிடெக்சன் (Automatic Stroke Detection) வருகிறது. மேலும், வாட்டர் டெம்பரேச்சர் (Water Temperature) சப்போர்ட் உள்ளது. ஆடியோ பிளே பேக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் (Built-in Speakers) வருகின்றன. போன் கால்களை போலவே ஆடியோவையும் கேட்கலாம்.

ஆப்பிள் மியூசிக் (Apple Music), ஆப்பிள் பாட்காஸ்ட் (Apple Podcasts), ஆப்பிள் புக்ஸ் (Apple Books) போன்ற ஆப்கள் சப்போர்ட் உள்ளது. 5 கிரேடு டைட்டானியம் பில்ட் வருகிறது. ஆகவே, ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் (Scratch-resistant) மற்றும் டியூரபிலிட்டி (Durability) கிடைக்கிறது. ஆப்பிள் மேப்ஸ் (Apple Maps) சப்போர்ட் உடன் டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual-frequency GPS) வருகிறது.
இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் பேக் செய்யப்பட்டுள்ள விடல்ஸ் ஆப் (Vitals App) மூலம் ஹெல்த் டிராக்கர் டேட்டாக்களை தெரிந்து கொள்ளலாம். ஆக்சன் பட்டன் (Action Button) வருகிறது. மல்டிஸ்போர்ட் வொர்க்அவுட் மோட்களை (Multisport workout Modes) ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். டிரான்ஸ்லேஷன் (Translation), வாய்ஸ் மெமோஸ் (Voice Memos), ஷசாம் (Shazam) போன்ற பீச்சர்கள் வருகிறது.
இப்படி ஏகப்பட்ட அப்கிரேட்களை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 பேக் செய்துள்ளது. இந்த மாடலின் விலை ரூ.67,088ஆக இருக்கிறது. இப்போது, ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வில் மேலும் பல்வேறு டிவைஸ்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆகவே, ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (Apple Watch Series 10) வெளியாகி இருக்கிறது. இந்த டிவைஸ்களோடு ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 புதிய அப்கிரேட் உடன் வெளியாகி ஆப்பிள் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications