ஆள் காட்டி விரலில் கன்ட்ரோல்.. எஸ்9 சிப்.. வாய்ஸ் ஹெல்த் அப்டேட்.. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம்!
உலகமே எதிர்பார்த்த ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் (Apple Wonderlust Event) ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch 9 Series) மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆள் காட்டி விரலில் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் ஹெல்த் அப்டேட் போன்ற அம்சங்கள் வருகின்றன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அம்சங்கள் (Apple Watch 9 Series Specification): இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 எஸ்9 சிப் (S9 Sip) கொண்டுள்ளது. வாட்ச்ஓஎஸ் 10 (WatchOS 10) சப்போர்ட் வருகிறது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் வருகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்சில் பிரத்யேகமாக டபுள் டேப் கன்ட்ரோல் (Double Tap Control) அம்சம் வருகிறது.

இதன்மூலம் உங்களது ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் 2 முறை சுண்டினால், போன் கால்களை அட்டண்ட் செய்துகொள்ள முடியும். அதையே மீண்டும் செய்தால் கட் செய்துகொள்ள முடியும். இப்படி, மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல்களை செய்து கொள்ள முடியும்.
இந்த சீரிஸ் வாட்ச்சில் ஹே சிரி (Hey Siri) வாய்ஸ் அசிஸ்டன்ட்டை ஹெல்த் அப்டேட்களுக்கான (Health Updates) பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, நேற்று எவ்வளவு நேரம் தூங்கினேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்று ஆங்கிலத்தில் வாய்ஸ் அசிஸ்டன்ட்டிடம் கேட்டால், அதற்கு சிரி உங்களது ஆட்டிவிட்டிகளை பகுப்பாய்வு செய்து சரியான பதிலை அளிக்கும்.
இதன்மூலம் உங்களது ஹெல்த் மீதான அப்டேட்டை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இந்த வாட்ச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, கார்பன் வெளியீட்டை கட்டுபடுத்தும் நோக்குடன் ரீ-சைக்கிள் செய்யப்பட்ட கோபால்ட் (Cobalt) உள்ளிட்ட தனிமங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு கிராஷ் டிடெக்ஷன் (Crash Detection) அம்சம் வருகிறது. இதன் மூலம் வாட்ச்சை நீங்கள் கட்டியிருக்கும்போது, ஏதாவது சேதம் ஏற்பட்டால், அலர்ட் தெரிவிக்கப்படும்.
மேலும், அட்வான்ஸ் சைக்கிள் டிராக்கிங் (Advanced Cycle Tracking) அம்சம் வருகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 பிங்க் (Pink), ஸ்டார்லைட் (Starlight), சில்வர் (Silver), மிட்நைட் (Midnight) மற்றும் ப்ராடெக்ட் ரெட் (Product Red) ஆகிய கலர்களின் விற்பனைக்கு வர இருக்கிறது. அதேபோல ஸ்டீல் வெர்ஷனில் (Steel Version) கோல்டு (Gold), சில்வர் (Silver) மற்றும் கிராஃபைட் (Graphite) கலர்களில் வருகிறது.
இந்த வாட்ச்சின் ஜிபிஎஸ் மாடலின் விலை ரூ.33,063 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல ஜிபிஎஸ் + செல்லூலார் மாடலின் விலை ரூ.41,351 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள் (Apple Watch Ultra 2 Specification): இந்த வாட்ச் எஸ்9 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. அதோடு நைட் மோட் (Night Mode) வருகிறது. இந்த வாட்ச்சிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் பட்டன் (Action button) வருகிறது. இந்த வாட்ச்சின் விலை ரூ. 67,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








