Apple Watch Series 8 அறிமுகம்: காத்திருந்தது வீண் போகல.. ஒவ்வொன்றும் உயிரை காக்கும்!

|

Apple Event 2022 எதிர்பார்த்தப்படி நேற்று (செப்டம்பர் 7) இரவு 10:30 மணிக்கு கோலாகளமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல் சாதனமாக புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ஸ்மார்ட் வாட்ச் என்றால் இப்படி தான் இருக்கும் என்ற நிலையை மாற்றும் வகையில் மேம்பட்ட அம்சங்களோடு ஆப்பிள் வாட்ச் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக்

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக் தோன்றி பேசினார். அதில் இந்த நிகழ்வு குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

நிகழ்வில் முதலாவதாக ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் அறிவிக்கப்பட்டது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆனது உடல் வெப்பநிலை கண்காணிப்பு, பெண்களின் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, பிரத்யேக வாகன ஓட்டுதல் பாதுகாப்பு கண்காணிப்பு என பல அம்சங்களுடன் வெளியிடப்பட்டது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: வெப்பநிலை சென்சார்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: வெப்பநிலை சென்சார்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆனது தூசி எதிர்ப்பு, ஸ்விம்மிங் ஆதாரம் மற்றும் கிராக் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. A-Fib கண்காணிப்பு ஆதரவுடன் கூடிய ECG சென்சார் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.இந்த ஆப்பிள் வாட்ச்சில் வெப்பநிலை சென்சார் இருக்கிறது.

வாட்ச் இன் கீழ்புறத்தில் பிரத்யேக சென்சார் இருப்பதாகவும் இது அணிந்திருப்பவரின் உடல்நிலையை கண்டறிந்து விழிப்பூட்டலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: கார் ஓட்டுனர் பாதுகாப்பு

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: கார் ஓட்டுனர் பாதுகாப்பு

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 இல் பிரத்யேகமாக ஒரு புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நீங்கள் கார் விபரத்தில் சிக்கியிருந்தால், அந்த பகுதியின் அவசர கால சேவைக்கு தானாகவே உங்களை இணைக்கும்.

கிராஷ் கண்டறிதல் அம்சமானது உங்கள் இருப்பிடத்தையும் அவசரகால தொடர்புகளுக்கு தானாகவே பகிரும்.

இதற்கென ஆப்பிள் வாட்ச்சில் தனித்துவ அல்காரிதம் உடன் கூடிய பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் பயணத் திட்டம் மேம்பட்டதாக இருக்கும். இந்த அம்சம் வாகனம் ஓட்டும் போது மட்டுமே செயல்படும்.

பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு

பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு

பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சியை இந்த ஆப்பிள் வாட்ச் மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாட்ச் 8 சீரிஸ் இன் அடிப்புறம் மற்றும் டிஸ்ப்ளேயின் கீழ் புறத்தில் கிரிஸ்டல் வெப்பநிலை உணரி இடம்பெற்றுள்ளது.

இது குறிப்பிட்ட காலத்திற்கான உடலின் வெப்பநிலையை கண்காணித்து சுழற்சியை புரிந்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: பேட்டரி ஆயுள்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: பேட்டரி ஆயுள்

ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் ஒரே சார்ஜில் 36 மணிநேர ஆயுளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறைந்த சக்தி பயன்முறை அம்சம் இடம்பெற்றுள்ளது.இந்த அம்சமானது பயனர்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுகிறது. அதாவது இந்த அம்சத்தின் மூலம் டிஸ்ப்ளே பயன்படுத்தாமல் இருக்கும் தானாக ஆஃப் செய்யப்படும். இதுபோன்ற பலமுறையில் பேட்டரி மிச்சப்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: விலை

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8: விலை

ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் இன் ஜிபிஎஸ் பதிப்பு $399 (தோராயமாக ரூ.31,783) எனவும் செல்லுலார் பதிப்பு $499 (தோராயமாக ரூ.39,749) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் இன்று முதல் முன்பதிவுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ

ஆப்பிள் வாட்ச் எஸ்இ

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 இன் ஆரம்ப நிலை மாடலாக ஆப்பிள் வாட்ச் எஸ்இ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் இல் இடைநிலை அளவுள்ள டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.கடிகாரத்தின் அடிப்பகுதியில் புதிய பிளாஸ்டிக் வடிவமைப்பு உள்ளது.

இதய துடிப்பு அறிவிப்பு, ஹெல்த் டிடெக்ஷன், க்ராஷ் டிடெக்ஷன் உள்ளிட்ட சில அடிப்படை அம்சங்களும் இதில் இருக்கிறது. இதன் விலை $249 (தோராயமாக ரூ.19,836) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் வாட்ச்சையும் இப்போதே ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை செப்டம்பர் 16 முதல் தொடங்கும்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா கரடுமுரடான புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்றது. இந்த வாட்ச் பல்வேறு நிலைகளிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இது பெரிய டிஸ்ப்ளே மற்றும் டைட்டானியம் பாக்ஸ் உடன் கூடிய உயர்நிலை மாடலாகும்.

இந்த மாடல் விளையாட்டு வீரர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தீவிர குளிர் மற்றும் வெப்பமான சூழல்களிலும் இந்த வாட்ச் வேலை செய்யும். அதிக சத்த ஆதரவுக்கு என இரண்டு ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை $799 தோராயமாக (ரூ.63,620) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23 முதல் இந்த வாட்ச் விற்பனைக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Apple Watch Series 8, Watch Ultra, Watch SE Launched: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X