ஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா?

|

செப்டம்பர் 10 ஆம் தேதி நடக்கவுள்ள ஆப்பிள் நிகழ்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ஐபோன் மற்றும் புதிய டைட்டானியம் செராமிக் ஆப்பிள் வாட்ச்களை அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 11

ஆப்பிள் ஐபோன் 11

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி அடுத்த சில வாரங்களில் நிகழ உள்ள நிலையில், பல புதிய லீக் தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. அதில் இன்று கசிந்துள்ள தகவலின் படி ஆப்பிள் தனது நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்துடன் பல புதிய சாதனங்களையும் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் கசிந்துள்ளது.

பிரேசிலின் வலைத்தள தகவலின்படி watchOS 6

பிரேசிலின் வலைத்தள தகவலின்படி watchOS 6

பிரேசிலின் வலைத்தளமான iHelp.br தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, watchOS 6 beta சேவையுடன் புதிய செராமிக் டைட்டானியம் ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பிள் வாட்ச், முன்பு வெளியான ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் அளவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<strong>இந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்!</strong>இந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்!

ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ்

ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ்

ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்பு அதன் ஆப்பிள் வாட்ச் 2 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் வாட்ச்களில் செராமிக் கேசிங் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் இல் செராமிக் வாட்ச்கள் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

<strong>கடுப்பில் தயாரிப்பாளர்கள்.! இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.!</strong>கடுப்பில் தயாரிப்பாளர்கள்.! இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.!

புதிய ஆப்பிள் 5 சீரிஸ்

புதிய ஆப்பிள் 5 சீரிஸ்

தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்போகும் ஆப்பிள் வாட்ச், புதிய ஆப்பிள் 5 சீரிஸ் வாட்ச்சாக இருக்கலாம் அல்லது ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் இன் புதிய வடிவமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Watch Series 5 In Titanium And Ceramic Versions To Be Launched Alongside iPhone 11 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X