Home
Gadgets

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விலை மற்றும் முன்பதிவு விபரக்குறிப்புகள்.!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பை நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பை நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. இந்த விழா நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. உலகளவில் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் சாதனங்களை ஒருவழியாய் நேற்று அறிமுகம் செய்துவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 ஐ அறிமுகம் படுத்தியது. மற்ற ஸ்மார்ட் வாட்ச்கள் போன்று இல்லாமல் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் அதிகாரி தெரிவித்தார்.
புதிய எஸ் 4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் இந்த புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முற்றிலும் புதிதாகவும் பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மேம்படுத்தப்பட்ட நிறைய அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. அதன்படி சிறப்பான அம்சம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது ஆப்பிள் இன் புதிய எஸ் 4 சிப்செட் மற்றும் உடனடி இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதி ஆகும்.

எட்ஜ்-டு-எட்ஜ் கர்வுட் டிஸ்ப்ளே

எட்ஜ்-டு-எட்ஜ் கர்வுட் டிஸ்ப்ளே

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் எட்ஜ்-டு-எட்ஜ் கர்வுட் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது முந்தைய மாடலை விட 30% பெரிய திரை வசதியைப் பயனருக்கு வழங்கும்நேற்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 இன் யூசர் இன்டர்பேஸ்,அதன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பயனர்கள் ஒருமுறை கேஸ்டர் செய்தால் போதும் வாட்ச்பேஸ் சேர்க்கலாம். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 திரையில் பங்கு சந்தை விவரம், இதயத் துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் டிஸ்பிலே இல் காட்டப்படுகிறது.

சிறப்பான சேவை

சிறப்பான சேவை

இம்முறை இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் டிஜிட்டல் கிரவுனில் ஹாப்டிக் பீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்பீக்கர் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி டாக்கி உள்படப் பல சேவைகளைப் பயனர்கள் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை

ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை

இந்த ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 ஜிபிஎஸ் இன் விலை 399 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,686 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் பிளஸ் ஜிபிஎஸ் வேரியன்ட் இன் விலை 499 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,875 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு

முன்பதிவு

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இன் முன்பதிவு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது, இதன் விற்பனை விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Watch Series 4 With Bigger Display, ECG Capability Launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X