Home
Gadgets

iPhone 17 Series மட்டுமில்ல.. Apple Watch பிரியர்களுக்கும் ட்ரீட்-தான்.. Series 11, Ultra 3.. லிஸ்ட் பெருசு!

ஆப்பிள் நிறுவனத்தின் ஆவ் டிராப்பிங் (Awe Dropping) நிகழ்வில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) மீதே இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. ஆனால், ஆப்பிள் வாட்ச் பிரியர்களுக்கும் இந்த நிகழ்வு பல மாடல்களின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதில் எந்தெந்த மாடல்களை எதிர்பார்க்கலாம்? அவற்றில் பீச்சர்கள் எப்படி இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆப்பிள் ஆவ் டிராப்பிங் நிகழ்வு இன்று நடக்கிறது. இதில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) ஆகிய மாடல்கள் முன்னணியில் இருக்கின்றன. இதற்கு அடுத்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 (Apple Watch Series 11), ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3) இருக்கின்றன.

iPhone 17 Series மட்டுமில்ல! Apple Watch பிரியர்களுக்கும் ட்ரீட்-தான்!

இதுபோக ஆப்பிள் வாட்ச் எஸ்இ (Apple Watch SE) மாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் ஆப்பிள் ஹப் (Apple Hub) மூலம் கசிந்தன. இதேபோல ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் வாட்ச் எஸ்இ மாடல்களின் முக்கிய பீச்சர்களும் கசிந்துள்ளன.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 அம்சங்கள் (Apple Watch Series 11 Specifications): இது முந்தைய மாடல்களை போலவே டிசைன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஹெல்த் மற்றும் ஆக்டிவிட்டி பீச்சர்களில் அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இதில் பிளட் பிரசர் மானிட்டரிங் (Blood Pressure Monitoring) வர இருப்பதாக தகவல் கசிந்தது.

அதோடு இதில் ஹைப்பர்டென்சன் மானிட்டர் (Hypertension Monitor) கிடைக்கும் என்றும் அதில் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் பிளட் பிரசர் அலெர்ட்கள் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியது. இதில் மீடியாடெக் மோடம் (MediaTek Modem) எதிர்பார்க்கலாம். அதேபோல இதில் எஸ்11 சிப் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முந்தைய மாடல்களைவிட கூடுதல் கலர்கள் கிடைக்கலாம்.

iPhone 17 Series மட்டுமில்ல! Apple Watch பிரியர்களுக்கும் ட்ரீட்-தான்!

அதேபோல 42 எம்எம் மற்றும் 44 எம்எம் சைஸ் வேரியண்ட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே மற்றும் கூடுதல் பேட்டரி பீச்சர்களை எதிர்பார்க்கலாம். மற்றபடி பிளாட் சைடு டிசைன் போன்ற வழக்கமான பிலிட் குவாலிட்டி கிடைக்கும். அதேபோல விலையில் மாற்றங்கள் இருக்கும், கூடுதல் டாலர்கள் விதிக்கப்படலாம்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 அம்சங்கள் (Apple Watch Ultra 3 Specifications): இந்த அல்ட்ரா மாடலில் 422 x 512 பிக்சல்கள் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆகவே, முந்தைய மாடல்களைவிட பெரிய டிஸ்பிளே எதிர்பார்க்கலாம். இதிலும் எஸ்11 சிப்செட் கிடைக்க இருக்கப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அப்கிரேட்களை இதில் எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 அம்சங்கள் (Apple Watch SE 3 Specifications): இதில் டிசைன் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், முந்தைய மாடல்களைவிட பெரிய டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆனால், எஸ்10 சிப்செட் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலை விவரங்கள் கசியவில்லை. இன்றிரவு நடக்கும் ஆப்பிள் ஆவ் டிராப்பிங் நிகழ்வில் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Apple Watch Series 11 Watch Ultra 3 Watch SE 3 What Can We Expect From Awe Dropping
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X