ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 Vs ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3.. என்ன விலை? எதை வாங்குவது நல்லது?
ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல்களில் உள்ள அம்சங்கள் என்னென்ன? என்ன விலை? எதை வாங்குவது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 அம்சங்கள்: ஆல்வேஸ்-ஆன் ரெடினா LTPO3 வைடு-ஆங்கிள் OLED டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட் பீக் பிரைட்னஸ், 326 PPI, அயன்-எக்ஸ் கிளாஸ் (Ion-X glass) புரொடெக்சன்உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் எஸ்10 64 பிட் டூயல் கோர் பிராஸசர் மற்றும் 4-கோர் நியூரல் எஞ்சின் (4-core Neural Engine) ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. பின்பு 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதவுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் வெளிவந்துள்ளது. 5ஜி, எல்டிஇ, வைஃபை 4, எல்1 ஜிபிஎஸ், புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், கலிலியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.
IP6X வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன் ரேட்டிங் கொண்டுள்ளது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11. அதேபோல் ஸ்பீக்கர், மைக்ரோஃபோன், மீடியா பிளேபேக் ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. பின்பு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் ஆனது 24 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்குகிறது. இதுதவிர ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாதனம்.
ஸ்லீப் ஸ்கோர், ஹார்ட் ரேட் சென்சார், மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function), பிளட் ஆக்ஸிஜன் சென்சார்1, டெம்ப்ரேச்சர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், வாட்டர் டெம்ப்ரேச்சர் சென்சார், இசிஜி, சைக்கிள் டிராக்கிங் உள்ளிட்ட பல சென்சார், ஹார்ட் ரேட் ஆப் உள்ளிட்ட பல ஆதரவுகள் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 சாதனத்தில் உள்ளன.
எமெர்ஜென்சி எஸ்ஒசி,ஃபால் டிடெக்சன் (Fall Detection), கிராஷ் டிடெக்சன், நாய்ஸ் மானிட்டரிங் போன்ற வசதிகளும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலில் உள்ளன. 42மிமீ மற்றும் 46மிமீ அளவுகளில் கிடைக்கிறது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11. அதுவும் கேஸ் ஃபினிஷ்களில் ஜெட் பிளாக், ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் நியூ ஸ்பேஸ் கிரே நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.
வாட்ச்ஓஎஸ் 26 ( watchOS 26) மூலம் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 இயங்குகிறது. குறிப்பாக இதில் செய்திகளில் நேரடி மொழிபெயர்ப்பு, வொர்க்அவுட் பட்ட்டி (Workout Buddy), புதிய வாட்ச் பேஸ்கள் என பல அம்சங்கள் உள்ளன.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 அம்சங்கள்: ஆல்வேஸ்-ஆன் ஒஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே வசதியுடன் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 326 PPI,1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், அயன்-எக்ஸ் கிளாஸ் (Ion-X glass) புரொடெக்சன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.
எஸ்10 சிப் மற்றும் 64 பிட் டூயல் கோர் பிராஸசர் உடன் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் வெளிவந்துள்ளது. 4-கோர் நியூரல் எஞ்சின் (4-core Neural Engine) ஆதரவும் இதில் உள்ளது. 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஆப்பிள் வாட்ச் மாடல். டபுள் டேப் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் வாட்ச்ஓஎஸ் 26 (watchOS 26) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது.
அதேபோல் ஸ்லீப் ஸ்கோர் (sleep score) என்ற அம்சத்துடன் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் இரவு நேரத்தில் தூங்கும் போது எவ்வளவு நேரம் அடிக்கடி எழுந்திருக்கிறீர்கள் மற்றும் ஒவ்வொரு தூக்க நிலையிலும் செலவிடும் நேரம் போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக இது போன்ற அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
ஸ்லீப் ஸ்கோர் போன்று ஹார்ட் ரேட் சென்சார், டெம்பரேச்சர் சென்சார், ஹை டைனமிக் ரேஞ்ச், மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function) போன்ற பல சுகாதார அம்சங்களுடன் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 5ஜி ஆதரவு இருப்பதால் பயனர்கள் மியூசிக், பாட்காஸ்ட்கள் மற்றும் ஆப்களை வேகமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் ஆனது 18 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்குகிறது. மேலும் இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக மீடியா பிளேபேக்கிற்கான பில்ட்-இன் ஸ்பீக்கர் ஆதரவும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளது.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 ஆனது 40மிமீ மற்றும் 44மிமீ அளவுகளில் கிடைக்கிறது. 5ஜி, புளூடூத் 5.3, வைஃபை 4, கலிலியோ, எல்1 ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
விலை
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடலின் ஆரம்ப விலை ரூ.25,900-ஆக உள்ளது. பின்பு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் ஆரம்ப விலை ரூ.46,900-ஆக உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்கள் விற்பனைக்கு வரும்.
எது சிறந்தது? தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 ஆகிய இரண்டுமே தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. ஆனால் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடலை விட வைடு ஆங்கிள் டிஸ்பிளே மற்றும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11மாடல். எனவே இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








