Home
Gadgets

Apple வாட்ச் சீரிஸ் 11 அறிமுகம்.. 5ஜி ஆதரவு.. 24 மணி நேரம் பேட்டரி லைஃப்.. என்ன விலை?

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 (Apple Watch Series 11) , ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 அம்சங்கள் (Apple Watch Series 11 Specifications): ஹைபர்டென்ஷன் டிடெக்ஷன், 5ஜி ஆதரவுடன் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. ஆப்டிகல் ஹார்ட் சென்சார் வசதியும் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் உள்ளன.

Apple வாட்ச் சீரிஸ் 11  அறிமுகம்.. 5ஜி ஆதரவு.. 24 மணி நேரம் பேட்டரி

ஸ்லீப் ஸ்கோர் (sleep score) என்ற தனித்துவமான அம்சத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தூங்கும் நேரம், நீங்கள் இரவு நேரத்தில் தூங்கும் போது எவ்வளவு நேரம் அடிக்கடி எழுந்திருக்கிறீர்கள் மற்றும் ஒவ்வொரு தூக்க நிலையிலும் செலவிடும் நேரம் போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக இது போன்ற அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஸ்லீப் ஸ்கோர் போன்று ஹார்ட் ரேட் சென்சார், மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function) போன்ற பல சுகாதார அம்சங்களுடன் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் 5ஜி ஆதரவு இருப்பதால் பயனர்கள் மியூசிக், பாட்காஸ்ட்கள் மற்றும் ஆப்களைவேகமாக பதிவிறக்கம் செய்யலாம்.

அயன்-எக்ஸ் கிளாஸ் (Ion-X glass) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். அதேபோல் வாட்ச்ஓஎஸ் 26 ( watchOS 26) மூலம் இந்த ஆப்பிள் வாட்ச் இயங்குகிறது. அதுவும் இது செய்திகளில் நேரடி மொழிபெயர்ப்பு, வொர்க்அவுட் பட்ட்டி (Workout Buddy), புதிய வாட்ச் பேஸ்கள் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 42மிமீ மற்றும் 46மிமீ அளவுகளில் கிடைக்கிறது. அதுவும் கேஸ் ஃபினிஷ்களில் ஜெட் பிளாக், ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் நியூ ஸ்பேஸ் கிரே நிறங்களில் அலுமினியம், அத்துடன் நேச்சுரல், கோல்ட் மற்றும் ஸ்லேட்டில் பாலிஷ் செய்யப்பட்ட டைட்டானியம் ஆகியவை அடங்கும்.

Apple வாட்ச் சீரிஸ் 11  அறிமுகம்.. 5ஜி ஆதரவு.. 24 மணி நேரம் பேட்டரி

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் ஆனது 24 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்குகிறது. இதற்கு முன்பு வந்த ஆப்பிள் வாட்ச் மாடல்கள் 18 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கியது. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனம் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

இந்தியா மற்றும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இன்று முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முன்பதிவு செய்யலாம். வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல் வாங்க கிடைக்கும். அதேபோல் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் விலை ரூ.46,900-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Watch Series 11 launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X