2026 குடியரசு தின ஆஃபர்.. ரூ.8,991 விலை குறைப்பில் Apple வாட்ச் சீரிஸ் 11.. பிளிப்கார்ட்டில் குவியுது ஆர்டர்!
பிளிப்கார்ட் தளத்தில் குடியரசு தின விற்பனை 2026 (Republic Day Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்களுக்கு நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. இதில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 (Apple Watch Series 11) ரூ.8,991 விலை குறைப்பில் கிடைக்கிறது. மேலும், பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு இப்போதே ஈ-காமர்ஸ் தளங்களில் சிறப்பு விற்பனை தொடங்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 17ஆம் தேதியில் குடியரசு தின விற்பனை தொடங்குகிறது. இருப்பினும், முன்னதாகவே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஆபரில் இந்த விலை குறைப்பில் வாங்க முடியும்.

அதாவது, ஓரிரு நாட்கள் மட்டுமே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல்களை விலை குறைப்பில் வாங்கி கொள்ள முடியும். இந்திய மார்கெட்டில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல்கள் அறிமுகமான போது, ரூ.46,990ஆக ஆரம்ப விலை இருந்தது. இப்போது, ரூ.8,991 விலை குறைப்பு போக ரூ.37,999 விலைக்கு பிளிப்கார்ட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
42 எம்எம் மாடலை ரூ.37,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 46 எஎம்எம் மாடலை ரூ.39,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் கிடைக்கிறது. 46 எம்எம் மாடலின் ஆரம்ப விலை ரூ.49,900ஆக இருந்தது. இப்போது ரூ.9,901 விலை குறைப்பில் கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 அம்சங்கள் (Apple Watch Series 11 Specifications): 46 எம்எம் மற்றும் 42 எம்எம் மாடல்களில் கிடைக்கிறது. ஓஎஸ்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஆல்வேஸ்-ஆன் ரெடினா டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. அயன்-எக்ஸ் ப்ரன்ட் கிளாஸ் (Ion‑X Front Glass) கிடைக்கிறது.
மேலும், 2X ஸ்கராட்ச் ரெசிஸ்டன்ஸ் (Scratch Resistance) உள்ளது. எஸ்10 எஸ்ஐபி டூயல் கோர் (S10 SiP Dual Core) சிப்செட் மற்றும் 4 கோர் நியூரல் என்ஜின் (4 Core Neural Engine) கொடுத்துள்ளது. 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் வாட்ச்ஓஎஸ் 26 (watchOS 26) இதில் கிடைத்துள்ளது. எலக்ட்ரிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Electrical Heart Sensor), பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (Blood Oxygen Sensor) வருகிறது.
மூன்றாவது ஜெனரேஷன் ஆப்டிகல் ஹார்ட் சென்சார் (Third‑generation Optical Heart Sensor), டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor), ஆல்வேஸ்-ஆன் அல்டிமீட்டர் (Always‑on Altimeter) உள்ளிட்ட சென்சார்கள் கிடைக்கின்றன. மேலும், ஹை டைனாமிக் ரேஞ்ச் கைரோஸ்கோப் (High Dynamic Range Gyroscope), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைத்துள்ளது.
வாட்டர் டெம்ப்ரேச்சர் சென்சார் (Water Temperature Sensor) கொடுத்துள்ளது. ஆகவே, பிளட் ஆக்ஸிஜன் லெவல், ஈசிஜி, ஹார்ட் ரேட் (ஹை மற்றும் லோவ் ரேட் நோட்டிபிகேஷன்), ஸ்லீப் டிராக்கிங் மற்றும் ஸ்டேஜ், சைக்கிள் டிராக்கிங் மற்றும் மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் டிராக்கிங் கிடைத்துள்ளது. இதற்காக பிரத்யேக ஆப்களையும் ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ளது.
IP6X டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், 50 மீட்டர்கள் ஆழம் வரையில் வாட்டர் ப்ரூப் கிடைக்கிறது. 5ஜி, எல்டிஇ, வை-பை 5, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது. 24 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். லோவ் பவர் மோடில் 38 மணி நேரங்கள் பயன்படுத்தலாம். கிராஷ் டிடெக்சன், ஃபால் டிடெக்சன் உள்ளிட்ட சேப்டி பீச்சர்களும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடல்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








