Home
Gadgets

ஆழ்கடல் முதல் ஆழ்ந்த தூக்கம் வரை: Apple Watch Series 10 அறிமுகம்.. மார்க்கெட் மிரளும் பீச்சர்களுடன்!

ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வில் (Apple It's Glowtime Event) மிரளவிடும் பீச்சர்கள் மற்றும் சென்சார்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (Apple Watch Series 10) வெளியாகி இருக்கிறது. முந்தைய மாடல்களைவிட பெரிய டிஸ்பிளே, ஸ்லிம் டிசைன் மட்டுமல்லாமல், ஃபாஸ்ட் சார்ஜிங், டீப் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டலிஜன்ஸ் கொண்ட இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அம்சங்கள் (Apple Watch Series 10 Specifications): வைடு-ஆங்கிள் ஓஎல்இடி டிஸ்பிளே (Wide-angle OLED Display) வருகிறது. வாட்ச் ஓஎஸ் 11 (WatchOS 11) மற்றும் எஸ்10 சிப் (S10 Chip) கொண்டிருக்கிறது. ஸ்விம்மிங், ஸ்நோர்கெலிங் ஆக்டிவிட்டிகளுக்காக வாட்டர் டெம்பரேச்சர் சென்சார் (Water Temperature Sensor) வருகிறது.

ஆழ்கடல் முதல் ஆழ்ந்த தூக்கம் வரை: Apple Watch Series 10 அறிமுகம்!

அதோடு பில்ட்-இன் டெப்த் காவ்ஜ் (built-in Depth Gauge) வருகிறது. 50 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குபிடிக்க கூடியது. ஆகவே, டைட்ஸ் ஆப் (Tides App) மற்றும் டெப்த் ஆப் (Depth App) சப்போர்ட் வருகிறது. இதுபோக ஓசியானிக்+ ஆப் (Oceanic+ App) சப்போர்ட் வருகிறது. ஸ்நோர்கெலிங் டேட்டாக்களை இந்த ஆப் மூலம் கண்காணித்து கொள்ளலாம்.

அதேபோல இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல்களில் ஸ்லீப் மூச்சுத்திணறல் டிடெக்சன் (Sleep apnea Detection) சப்போர்ட் வருகிறது. இதற்காக ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) வருகிறது. இதுவரையில் வெளியான மாடல்களைவிட ஃபாஸ்டெஸ்ட் சார்ஜிங் மாடலாக இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 இருக்கிறது. வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.

18 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. இன்-பில்ட் மைக் (In-Buit Mic) வருகிறது. அதோடு பிளேபேக் ஸ்பீக்கர் (PlayBack Speaker) வருகின்றன. கிரேட் 5 டைட்டானியம் கேஸ் (Titanium Case) வருகிறது. ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 45 எம்எம் மற்றும் 49 எம்எம் ஆப்ஷன்களில் வெளியாகி இருக்கிறது.

ஆழ்கடல் முதல் ஆழ்ந்த தூக்கம் வரை: Apple Watch Series 10 அறிமுகம்!

இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடலில் ஜிபிஎஸ் வெர்ஷன் (GPS Version) விலை ரூ.33,500 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜிபிஎஸ் மற்றும் செல்லூலார் வெர்ஷன் (GPS+ Cellular Version) விலை ரூ.41,894ஆக இருக்கிறது. இந்த விலை அமெரிக்கா டாலர்களில் நிர்ணயிக்கப்பட்டது. இந்திய விலை நிர்ணயத்தில் மாற்றங்கள் இருக்கலாம்.

ஜேட் பிளாக் (Jet Black), ரோஸ் கோல்டு (Rose Gold) மற்றும் சில்வர் அலுமினியம் (Silver Aluminum) கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஆப்பிள் இன்டலிஜன்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல்களுக்கு செல்லலாம். இந்த மாடல்களோடு ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகமாகி இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள் (Apple Watch Ultra 2 Specifications): இந்த மாடலிலும் கிரேடு 5 டைட்டானியம் பாடி வருகிறது. வாட்ச்ஓஎஸ் 11 வருகிறது. ஆப்லைன் மேப் (Offline Map) மற்றும் ட்ரெய்னிங் லோட் (Training Load) சப்போர்ட் உள்ளது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே வருகிறது. 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது.

ஆழ்கடல் முதல் ஆழ்ந்த தூக்கம் வரை: Apple Watch Series 10 அறிமுகம்!

லோவ் பவர் மோடில் (Low Power Mode) 72 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இன்பில்ட்-ஸ்பீக்கர் வருகிறது. சாட்டின் பிளாக் (Satin Black) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ.67,000 பட்ஜெட்டில் தொடங்குகிறது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இப்போது ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Watch Series 10 With Sleep Apnea Launched Sale From September 20 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X