Home
Gadgets

விலைய கேட்டா தலையே சுத்தும்.. Apple Watch Series 10-ல பீச்சர்கள் அப்படி.. இந்திய விலை எப்படி? விற்பனை எப்போது?

இந்திய ஆப்பிள் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களையும் தூக்கி சாப்பிடும்படியான அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (Apple Watch Series 10) வெளியாகி இருக்கிறது. டைட்டானியம் கேஸ், அலுமினியம் கேஸ், ஜிபிஎஸ் மற்றும் செல்லூலார் போன்ற பல்வேறு வேரியண்ட்கள் வருகின்றன. ஆப்பிள் ஸ்டோர்களில் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்ட நேரத்தில் இந்திய விலை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விலை விவரங்கள் உடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடலின் முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்வோம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அம்சங்கள் (Apple Watch Series 10 Specifications): 46 மிமீ மற்றும் 42 மிமீ வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது. வைடு-ஆங்கிள் ஓஎல்இடி (Wide‑angle OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஆல்வேஸ்-ஆன் ரெடினா (Always‑On Retina) டிஸ்பிளே மாடலாகும். 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

விலைய கேட்டா தலையே சுத்தும்.. Apple Watch Series 10-ல பீச்சர் அப்படி!

டிஸ்பிளே புரொடெக்சனை பார்க்கையில், அலுமினியம் கேஸ் மாடலில் ஐஆன்-எக்ஸ் ஃபரன்ட் கிளாஸ் (Ion‑X Front Glass) மற்றும் டைட்டானியம் கேஸ் மாடலில் சப்பிஹைர் ப்ரன்ட் கிரிஸ்டல் (Sapphire Front Crystal) வருகிறது. 64 பிட் டூயல்-கோர் எஸ்10 எஸ்ஐபி (64 bit Dual-core S10 SiP) சிப்செட் மற்றும் 4 கோர் நியூரல் என்ஜின் (4‑core Neural Engine) வருகிறது.

64 ஜிபி மெமரி மற்றும் லேட்டஸ்ட் வாட்ச்ஓஎஸ் 11 (watchOS 11) வருகிறது. ஹெல்த் டிராக்கிங் (Health Tracking) பீச்சர்களை பொறுத்தவரையில், ரன்னிங், சைக்கிளிங் போன்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிகள் மட்டுமல்லாமல், ஸ்விம்மிங், ஸ்நோர்கெலிங், கயக்கிங் போன்ற வாட்டர் ஆக்டிவிட்டிகளுக்காக மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன.

மேலும், வழக்கமான ஹார்ட்ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர், ஸ்லீப் டிராக்கர் போன்றவை வருகின்றன. இதற்காக பல்வேறு ஆப்களின் சப்போர்ட் வருகிறது. ஆகவே, பிளட் ஆக்ஸிஜன் ஆப் (Blood Oxygen App), ஈசிஜி ஆப் (ECG App) மற்றும் நாய்ஸ் ஆப் (Noise App), ஸ்லீப் ஆப் (Sleep) வருகிறது. ஹார்ட் ரேட் ஆப் (Heart Rate App), மெடிடேஷன் ஆப் (Medications App) வருகிறது.

விலைய கேட்டா தலையே சுத்தும்.. Apple Watch Series 10-ல பீச்சர் அப்படி!

ஆகவே, தூக்கும்போது மூச்சுத்திணறல், இதயதுடிப்பில் மாறுதல், ஆக்ஸிஜன் லெவல் மாறுதல், ஸ்லீப் பேட்டர்ன் மாற்றம் போன்றவற்றின் போது அந்தந்த ஆப்கள் மூலம் நோட்டிபிகேஷன்கள் அனுப்பப்படும். இதன் மூலம் ஹெல்த் கான்சியஸ் பக்காவாக இருக்கும். அதேபோல சைக்கிள் டிராக்கிங் ஆப் (Cycle Tracking App) போன்ற ஸ்போர்ட்ஸ் ஆப்களும் வருகின்றன.

50 மீட்டர் ஆழம் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. அதேபோல IP6X டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. கிராஷ் டிடெக்சன் (Crash Detection), ஃபால் டிடெக்சன் (Fall Detection) போன்ற சேப்டி பீச்சர்கள் வருகின்றன. எல்டிஇ (LTE), வை-பை 4 (Wi-Fi 4), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் ஜிஎன்எஸ்எஸ் (GNSS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.

நார்மல் மோடில் 18 மணி நேரமும் மற்றும் லோவ் பவர் மோடில் 36 மணி நேரமும் பேக்கப் கிடைக்கிறது. அலுமினியம் கேஸ் மாடலில் ஜேட் பிளாக் (Jet Black), ரோஸ் கோல்டு (Rose Gold) மற்றும் சில்வர் (Silver) கலர்கள் வருகின்றன. டைட்டானியம் கேஸ் மாடலில் ஸ்லேட் (Slate), கோல்டு (Gold) மற்றும் நேச்சுரல் (Natural) கலர் வேரியண்ட்கள் வருகின்றன.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 விலை (Apple Watch Series 10 Price): அலுமினியம் கேஸ் (ஜிபிஎஸ்) கொண்ட 42 மிமீ மாடலின் விலை ரூ.46,900ஆகவும், 46 மிமீ மாடலின் விலை ரூ.49,900ஆகவும் இருக்கிறது. அதேபோல அலுமினியம் கேஸ் (ஜிபிஎஸ் + செல்லூலார்) கொண்ட 42 மிமீ மாடலின் விலை ரூ.56,900ஆகவும், 46 மிமீ மாடலின் விலை ரூ.59,900ஆகவும் இருக்கிறது.

மேலும், டைட்டானியம் கேஸ் (ஜிபிஎஸ் + செல்லூலார்) கொண்ட 42 மிமீ மாடலின் விலை ரூ.79,900 ஆகவும், 46 மிமீ மாடலின் விலை ரூ.84,900ஆகவும் இருக்கிறது. இதே மாடலில் மிலனீஸ் ஸ்ட்ராப் வேண்டுமானால், 42 மிமீ மாடலின் விலை ரூ.84,900ஆகவும், 46 மிமீ மாடலின் விலை ரூ.89,900ஆகவும் விலை அதிகரிக்கிறது. செப்டம்பர் 20ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Apple Watch Series 10 India Price Starts At Rs 46900 Sale From September 20 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X