Home
Gadgets

Apple வாட்ச் எஸ்இ 3 இந்தியாவில் அறிமுகம்.. 64ஜிபி மெமரி.. 5ஜி ஆதரவு.. என்ன விலை? எப்போது விற்பனை?

ஆப்பிள் நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆப்பிள் வாட்ச் எஸ் 3ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 (Apple Watch SE 3) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 5ஜி ஆதரவு, ஸ்லீப் ஸ்கோர், தரமான டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடலின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 அம்சங்கள் (Apple Watch SE 3 Specifications): எஸ்10 சிப் (S10 chip) உடன் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளே(Always-On display) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.

Apple வாட்ச் எஸ்இ 3 இந்தியாவில் அறிமுகம்.. 64ஜிபி மெமரி.. என்ன விலை?

அயன்-எக்ஸ் கிளாஸ் (Ion-X glass) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் இந்த சாதனம். அதேபோல் வாட்ச்ஓஎஸ் 26 ( watchOS 26) மூலம் இந்த ஆப்பிள் வாட்ச் இயங்குகிறது. குறிப்பாக இதில் செய்திகளில் நேரடி மொழிபெயர்ப்பு, வொர்க்அவுட் பட்ட்டி (Workout Buddy), புதிய வாட்ச் பேஸ்கள் என பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 சாதனத்தில் உள்ள Siri வேகமாக பதிலளிக்கிறது மற்றும் சுகாதாரத் தரவை தனிப்பட்ட முறையில் பதிவு செய்யவோ அல்லது அணுகவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு Find My அம்சம் இதில் உள்ளது. இதுதவிர SOS பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது

ஸ்லீப் ஸ்கோர் (sleep score) என்ற அம்சத்துடன் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் இரவு நேரத்தில் தூங்கும் போது எவ்வளவு நேரம் அடிக்கடி எழுந்திருக்கிறீர்கள் மற்றும் ஒவ்வொரு தூக்க நிலையிலும் செலவிடும் நேரம் போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக இது போன்ற அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஸ்லீப் ஸ்கோர் போன்று ஹார்ட் ரேட் சென்சார், டெம்பரேச்சர் சென்சார், ஹை டைனமிக் ரேஞ்ச், மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function) போன்ற பல சுகாதார அம்சங்களுடன் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 5ஜி ஆதரவு இருப்பதால் பயனர்கள் மியூசிக், பாட்காஸ்ட்கள் மற்றும் ஆப்களை வேகமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 ஆனது 40மிமீ மற்றும் 44மிமீ அளவுகளில் கிடைக்கிறது. மேலும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது. 5ஜி, புளூடூத் 5இ வைஃபை 4, கலிலியோஇ எல்1 ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. மிட்நைட் மற்றும்

ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் ஆனது 18 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்குகிறது. மேலும் இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக மீடியா பிளேபேக்கிற்கான பில்ட்-இன் ஸ்பீக்கர் ஆதரவும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளது. 64-பிட் டூயல் கோர் பிராசஸர் (64‑bit dual-core processor) வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

Apple வாட்ச் எஸ்இ 3 இந்தியாவில் அறிமுகம்.. 64ஜிபி மெமரி.. என்ன விலை?

இந்தியா மற்றும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இன்று முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முன்பதிவு செய்யலாம். வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 மாடல் வாங்க கிடைக்கும்.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 விலை
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 GPS 40mm விலை ரூ.25,990-ஆக உள்ளது.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 GPS + Cellular 40mm விலை ரூ.30,900-ஆக உள்ளது.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 GPS 44mm விலை ரூ.28,900-ஆக உள்ளது.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 GPS + Cellular 44mm விலை ரூ.33,900-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Watch SE 3 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X