மேலும் இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! உதவிய எமர்ஜென்சி அலர்ட்

ஆப்பிள் வாட்ச் மட்டும் இல்லையென்றால் சரியான நேரத்தில் இதை கண்டறிந்து சிகிச்சை அளித்திருக்க முடியாது என்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.

|

பயனர்களின் பிட்னஸ் குறிக்கோள்களை அடைய உதவுவது மட்டுமில்லாமல், தொடர்ந்து வெற்றிகரமாக உயிர்களையும் காப்பாற்றி வருகிறது ஆப்பிள் வாட்ச். ஏப்ரலில் நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில், ஆப்பிள் வாட்ச் சரியாக ஆபத்து காலத்தில் மீட்க உதவியிருக்கிறது. முதல் சம்பவத்தில், நியூயார்க் வாசியான வில்லியம் மோன்சிடிலீஸ்-ன் உயிர் ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த நோட்டிபிகேசனால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. மற்றொரு சம்பவத்தில், டியான்னா ரெக்டென்வால்டு என்ற ப்ளோரிடா இளைஞர், ஆப்பிள் வாட்ச்லிருந்து அனுப்பப்பட்ட அலர்ட் மூலம் சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!


என்.பி.சி அறிக்கையின் படி, 32 வயதான மோன்சிடிலீஸ் பவுலர்லேண்டில் குடும்பதொழிலை செய்துவருகிறார். தலைசுற்றல் வந்து கழிப்பறை சென்றபோது, இரத்தப்போக்கு ஏற்பட்டவுடன், ஆப்பிள் வாட்ச் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்ற எச்சரிக்கையை அனுப்பியது.

இந்த அறிகுறிகள் தென்பட்டு, ஆப்பிள் வாட்சும் எச்சரிக்கை செய்ததால் மோன்சிடிலீஸ் உடனடியாக மருத்துவமனை சென்றார். அப்போது அவர் கார் ஓட்டிச்செல்லும் போது அனைத்து இடங்களிலும் இரத்தப்போக்கு ஏற்பட்டு ஒரு பேய் போல இருந்தார் என்கிறார் அவரின் தாயார். இதில் 80% ரத்தத்தை இழந்தார்

மோன்சிடிலீஸ்:

மோன்சிடிலீஸ் எரப்டேட் அல்சரால் பாதிக்கப்பட்டதாகவும்,உடனடியாக டிரான்ஸ்பியூசன் தேவைப்பட்டதாகவும் கூறுகிறார் அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர். " நான் அதிக அளவு இரத்தத்தை இழுந்துவிட்டேன். எனவே அறுவை சிகிக்சைக்காக செலுத்தப்பட்ட அனஸ்தீசியா என் மூளையை சென்றடைய டிரான்ஸ்பியுசன் தேவைப்பட்டது" என்கிறார் மோன்சிடிலீஸ். சரியான நேரத்தில் ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கை வரவில்லை என்றால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

18 வயதான ரெக்டென்வால்டு, ஆப்பிள் வாட்ச் அனுப்பிய இதய துடிப்பு எச்சரிக்கையால் கிட்னி செயலிழப்பை தவிர்த்து தனது உயிரை காப்பாற்றிய கதையை கூறிய பின்னரே, இந்த கதை வெளிவந்தது. மேலும் இது ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் கூக்கின் கவனத்தையும் ஈர்த்தது.

ஏபிசி நியூஸ் ரிப்போர்டின் படி, ரெக்டென்வால்டு தனது இதயதுடிப்பு 190BPM இருப்பதாக ஆப்பிள் வாட்ச்சில் பார்த்தார். ஆனால் தலைவலி மற்றம் சிறு சுவாச கோளாறு தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை. எனினும் அவரின் தாயார், செவிலியர் என்பதால் கிளினிக்கிற்கு அழைத்து சென்றார். அங்கு ஆப்பிள் வாட்ச்சின் எச்சரிக்கை சரி என்பதை உறுதிபடுத்தி கிட்னி செயலிழப்பை மருத்துவர்கள் தடுத்தனர்.

மேலும் இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!


ஆப்பிள் வாட்ச் மட்டும் இல்லையென்றால் சரியான நேரத்தில் இதை கண்டறிந்து சிகிச்சை அளித்திருக்க முடியாது என்கின்றனர் அவரின் குடும்பத்தினர். அதே நேரம் அவரின் தாயார் டிம் கூக்கிற்கு நன்றி தெரித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு டிம் பதில் தெரிவிக்காத போதிலும், இந்த கதையை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் நடந்த கொலையின்முக்கிய குற்றவாளியை கண்டறிந்ததுடன், 911 கால் செய்து ஒரு பெண்மணியையும் அவரின் 9மாத குழந்தையும் காப்பாற்றியுள்ளது என்பதையும் நினைவுகூற வேண்டும்.
Best Mobiles in India

English summary
Apple Watch Said to Save Two More Lives With Its Emergency Alerts ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X