Apple போட்ட போடு.. இந்த சம்பவம் பெருசு டோய்.. ஆப்பிள் வாட்ச் மட்டுமில்ல.. AirPods பிரியர்களுக்கும் யோகம்தான்!
ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் (Apple AirPods) பிரியர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும்படி ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் (Bloomberg Mark Gurman) ஒரு அப்டேட்டை கொடுத்து இருக்கிறார். விசுவல் இன்டலிஜென்ஸ் டெக்னாலஜி (Visual Intelligence Technology) வருகையை தொடர்ந்து இன்-பில்ட் கேமராவாவனது ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்களில் வர இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச்களில் இருக்கும் பீச்சர்களை அடித்து கொள்ள முடியாது. ஒருவர், கார் விபத்தில் சிக்கினாலோ, இதய துடிப்பு குறைந்து மயக்கம் அடைந்தாலோ, நீரில் மூழ்கினாலோ உடனடியாக உதவி எண்ணுக்கு அழைக்கும்படியான சென்சார்கள் மற்றும் பீச்சர்களை ஆப்பிள் வாட்கள் கொடுக்கின்றன. இதுபோக சாட்டிலைட், செல்லூலார் போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல், ஸ்லீப் டிராக்கிங் போன்ற ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டரிங் மற்றும் ஹெல்த் டிராக்கர்களை கொடுக்கின்றன. இப்படி ஏகப்பட்ட பீச்சர்கள் இருந்தும், அதில் கேமரா கிடையாது. இப்போது வரையில் ப்ளூடூத் காலிங் மட்டுமே செய்து கொள்ளும்படி ஆப்ஷன் இருக்கின்றன. மார்கெட்டில் கேமராவுடன் ஸ்மார்ட்வாட்ச்கள் வருகின்றன.
கேமரா மூலம் வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் செய்து கொள்ளும் பீச்சரும் அவற்றில் இருக்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட பிரீமியம் ஸ்மார்ட்போன் விலைக்கு விற்கும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா இல்லாதது குறையாகவே இருந்தது. இந்த குறைக்கு டபுள் ட்ரீட் வைத்தது போல ஆப்பிள் நிறுவனத்தின் எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை கொடுக்கும் மார்க் குர்மன் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.
2027ஆம் ஆண்டுகளுக்குள் விசுவல் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட ஏஐ பீச்சர்களுடன் ஆப்பிள் வாட்ச்சில் இன்-பில்ட் கேமராவை கொடுக்க ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இது ஆப்பிள் ஏர்பாட்களிலும் இடம்பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது, விசுவல் இன்டலிஜென்ஸ் சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் கூகுள் ஏஐ மாடல்களை (Google AI Model) நம்பி இருக்கிறது.
ஆனால், ஆப்பிள் நிறுவனம் சொந்த விசுவல் இன்டலிஜென்ஸ் மாடலை உருவாக்க இருக்கிறது. இதனால் ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்களில் பயன்படுத்தும்படி அவற்றில் இன்-பில்ட் கேமராக்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, ஆப்பிள் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுக்குள் கேமராவுடன் கூடிய ஆப்பிள் வாட்ச்களை களமிறக்க இருக்கிறது.
இப்போதைக்கு டிஸ்பிளேவுடன் கேமராவை கொண்டுவர ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஆனால், கட்அவுட் (Cutout) மாடலாக வருமா அல்லது அண்டர் டிஸ்பிளே கேமரா (Under-display Camera) மாடலாக வருமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இதேபோல ஆப்பிள் ஏர்பாட்களிலும் எப்படி இடம்பெறும் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை. அடுத்தடுத்த அப்டேட்களில் தெரியவர வாய்ப்புள்ளது.
ஆகவே, கேமராவுடன் கூடிய ஆப்பிள் வாட்ச், மற்றும் ஏர்பாட்கள் 2027ஆம் ஆண்டுக்குள் வெளியாக இருப்பது உறுதி என்பது தெரிகிறது. இந்த காலக்கெடு ஆப்பிள் ஏஐ குழுவின் அவுட்புட்டை பொறுத்து மாறுபடவும் இருப்பதாக குர்மன் தெரிவித்து இருக்கிறார். வெறும் கேமரா மட்டுமல்லாமல், அது தொடர்பான ஏஐ பீச்சர்களையும் ஆப்பிள் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
ஆகவே, இப்போது கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களைவிட அது மிகவும் பிரீமியமான விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதால், சாம்சங் போன்ற பேட்டி நிறுவனங்களும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்வாட்ச்களை களமிறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்வாட்ச்களில் தனியிடம் பிடிக்கும்.


Click it and Unblock the Notifications








