Home
Gadgets

இந்த TWIST-ஐ எதிர்பார்க்கல.. புது iPhone 17 கிடக்குது.. Apple-ன் புதிய Powerbeats இயர்பட்ஸ்!

செப்டம்பர் 9 என்று தேதியை அறிவித்ததில் இருந்து ஐபோன் ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் அனைவரும் - ஆப்பிளின் புதிய ஐபோன் 17 சீரிஸ் மீது.. குறிப்பாக "புத்தம் புது மாடலாக" வரும் ஐபோன் 17 ஏர் மாடல் மீதும் கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில்.. ஆப்பிள் ஒரு புதிய டீஸரை வெளியிட்டு.. எல்லோருடைய கவனத்தையும் வேறுபக்கம் திருப்பிவிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய பவர்பீட்ஸ் ஃபிட் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்செட்டை (Apple Powerbeats Fit TWS Headset) அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் "ஆவ் ட்ராப்பிங்" வெளியீட்டு நிகழ்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கம் வழியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது iPhone 17 கிடக்குது.. Apple-ன் புதிய Powerbeats இயர்பட்ஸ்!

ஆனால் பெரும்பாலும் இது செப்டம்பர் 9 நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படாமல் போகலாம். அந்நிகழ்வில் ஐபோன் 17 சீரீஸ், ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11 (Apple Watch Series 11) மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (Apple AirPods Pro 3) போன்ற தயாரிப்புகளும் வெளியிடும் என்று மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக ஆப்பிளின் புதிய பவர்பீட்ஸ் ஃபிட் ஹெட்செட் ஆனது செப்.9 வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகு சில வாரங்கள் கழித்து அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் ஆப்பிள் வெளியிட்டுள்ள டீஸர் ஆனது, பவர்பீட்ஸ் ஃபிட் இயர்பட்ஸ் ஆனது 2025 இலையுதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கிறது. ஆக இது 2025 செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் அல்லது செப்டம்பர் 9 அன்று நிகழ்வுக்கு பிறகு, சில வாரங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படலாம்.

அறியாதோர்க்கு பீட்ஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் கடந்த 2025 பிப்ரவரியில் பவர்பீட்ஸ் ப்ரோ 2 (Powerbeats Pro 2) ஹெட்செட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனாலும் வரவிருக்கும் புதிய பவர்பீட்ஸ் ஃபிட் பற்றி வேறு விவரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை

இருப்பினும் இந்த ஹெட்செட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பவர்பீட்ஸ் ப்ரோ 2 மாடலில் உள்ள இதய துடிப்பு உணர்தல் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம் என்றும், இது ஐபி ரேட்டிங்கை (ஸ்பிளாஷ் அல்லது வியர்வை எதிர்ப்பு) கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் பவர்பீட்ஸ் ப்ரோ 2 மாடல் ஆனது ரூ.29,900 க்கு அறிமுகமானது.

பவர்பீட்ஸ் ப்ரோ 2 முக்கிய அம்சங்கள்:
- ஏஎன்சி (ANC),
- வைஸ் ஐசோலேஷன்
- டைனமிக் ஹெட் டிராக்கிங்
-பெர்சனலைஸ்டு ஸ்பேஷியல் ஆடியோ
- ஐபிஎக்ஸ்4 ஸ்பிளாஷ்-ரெசிஸ்டன்ஸ்
- ஆப்பிள் எச்2 சிப்செட்
- ஹார்ட் ரேட் மானிட்டர்
- கேஸுடன் சேர்த்து 45 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
- க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்

ஆப்பிள் "ஆவ் ட்ராப்பிங்" (Apple Awe Dropping event 2025) வெளியீட்டு நிகழ்வு விவரங்கள்: இது 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் தொடங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் "ஆவ் ட்ராப்பிங் நிகழ்வில் என்னென்ன அறிமுகம் செய்யப்படலாம்?
1. ஐபோன் 17 (iPhone 17)
2. ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro)
3. ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air)
4. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)
5. ஆப்பிள் ஏர்பாட் ப்ரோ தேர்ட் ஜெனரேஷன் (AirPods Pro 3rd Generation)
6. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 (Apple Watch Series 11)
7. ஆப்பிள்வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3)
8. ஐபோன் 17 சீரீஸ்க்கான புதிய டெக்வோவன் கேஸ் (மேக்சேஃப் ஆக்சஸெரீ)

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple to Launch New Powerbeats Fit Earbuds After iPhone 17 launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X