2026 வரை எந்த புது லேப்டாப்பும் வாங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. ஏன்னா?
2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒரு புதிய லேப்டாப்பை வாங்கிட விட வேண்டும் என்கிற திட்டம் இருந்தால், அதை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கவும். ஏனென்றால் ஆப்பிள் (Apple) நிறுவனமானது, ஐபோன் சிப் (iPhone Chip) உடன் கூடிய மலிவான மேக்புக் (MacBook) மாடலை சோதித்து வருகிறது.
ப்ளூம்பெர்க்கின் குர்மன் (Bloomberg's Gurman) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது இந்த மேக்புக் மாடலானது ஆரம்பகால தயாரிப்பு நிலையில் இருக்கிறது மற்றும் ஆப்பிள் நிறுவனம் இதை 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கூடவே அந்த அறிக்கை, இந்த மேக்புக் மாடலின் டிஸ்பிளே மற்றும் எதிர்பார்க்கப்படும் விலையையும் அது வெளிப்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, ஜே700 என்கிற இன்டர்னல் கோட்நேம் (internal codename) உடன் கூடிய இந்த புதிய நோட்புக் ஆனது ஆப்பிளின் வழக்கமான எம்-சீரிஸ் சிப்களுக்கு (M-Series Chip) பதிலாக ஏ-சீரிஸ் ஐபோன் சிப்பின் (A-Series iPhone Chip) கீழ் இயங்கும். மேலும் இது ஏற்கனவே இருக்கும் 13.6-இன்ச் மேக்புக் ஏர் மாடலை விட சற்று சிறியதாக இருக்கும் லோ-எண்ட் எல்சிடி ஸ்க்ரீனை (lower-end LCD screen) பயன்படுத்தும்.
ஒட்டுமொத்தமாக ஆப்பிளின் இந்த பட்ஜெட் விலை மேக்புக் ஆனது - சாதாரண பயனர்கள், மாணவர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த லேப்டாப் ஆனது இன்டர்நெட் ப்ரவுஸிங், டாக்குமெண்ட் வொர்க் மற்றும் 'லைட்' ஆன மல்டிமீடியா டாஸ்க்களுக்கு தங்கள் லேப்டாப்களை நம்பியிருப்பவர்களை இலக்காக கொண்டிருக்கும்.
விலையை பொறுத்தவரை இந்த மாடல் $1,000 க்கும் குறைவான விலையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.88,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது க்ரோம்புக்ஸ் (Chromebooks) மற்றும் என்ட்ரி லெவல் விண்டோஸ் (Windows) லேப்டாப்களுக்கு நேரடி போட்டியாளராக நிலைநிறுத்தப்படலாம்
இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் இந்த பட்ஜெட் விலை மேக்புக் மாடலுக்கு என்ன பெயர் (Model Name) வைத்துள்ளது என்று இன்னும் தெரியவில்லை, இருப்பினும் இது ஒரு மேக்புக் ஏர் சீரீஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆய்வாளர் மிங்-சி குவோவின் (Analyst Ming-Chi Kuo) முந்தைய ஊகத்தின் படி, இந்த மேக்புக் மாடலில் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலில் உள்ள அதே ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப் (A18 Pro Chip) பயன்படுத்தப்படலாம்
இது உண்மையாக இருந்தால், இந்த புதிய பட்ஜெட் விலை மேக்புக் மாடலின் செயல்திறன் நிலைகள் ஆனது பழைய எம்1 மேக்புக் ஏர் மாடல் உடன் ஒப்பிடப்படக்கூடியதாக இருக்கும். இது மேம்பட்ட செயல்திறனுடன் அன்றாட வேலைகளை செய்ய போதுமானதாக இருக்கும். ஆப்பிள் சிக்னேச்சர் மேக் எக்ஸ்பீரியன்ஸை பராமரிக்கும் அதே வேளையில் செலவுகளை குறைக்க இது லெஸ்-அட்வான்ஸ்டு காம்போனென்ட்களை (Less-advanced components) ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
லோ-பிரைஸ் மேக்புக் ஆனது ஆப்பிளின் உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கலாம். இதுவரை க்ரோம்புக்ஸ் ஆதிக்கம் செலுத்தி வரும் என்டரி-லெவல் லேப்டாப் பிரிவின் மீதான ஆப்பிள் ஆசையை காட்டுகிறது. மேலும் இது ஐபேட் (iPad) மீது ஆர்வம் இல்லாத மற்றும் மேக்புக் ஏர்-க்காக அதிகம் செலவிட விரும்பாத பயனர்களையும் நிச்சயம் ஈர்க்கக்கூடும்.
மேலும் ஆப்பிள் நிறுவனம் ஆனது இந்த பட்ஜெட் விலை மேக்புக் மாடலை அதன் சொந்த ரீடெயில் சேனல்கள் (Retail channels) மூலம் அறிமுகப்படுத்தினால், ஆப்பிள் நிறுவனம் அதன் கோர் லைன்அப்பில், உண்மையான பட்ஜெட்-பிரெண்ட்லி தயாரிப்பை வழங்கும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








