10' இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் ஆகும் ஐபாட் மினி 5 & ஆப்பிள் iOS 13.!
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் நடுவில் அதன் 10' இன்ச் ஐபாட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபாட் மாடல்களை அறிமுகம் செய்யப்போகிறது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் நடுவில் அதன் 10' இன்ச் ஐபாட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபாட் மாடல்களை அறிமுகம் செய்யப்போகிறது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபாட் 4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து
2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபாட் 4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது புதிய ஆப்பிள் இன் ஐந்தாவது ஜெனெரேஷன் ஐபாட் மினி மற்றும் மலிவான நுழைவு நிலை ஐபாட் மாடல்களை உருவாகியுள்ளது.

10' இன்ச் டிஸ்பிளே
புதிய ஆப்பிள் ஐபாட் மினி 5 ஆம் மாடலில் சிறப்பான கேமரா சேவை, டச் ஐடி மற்றும் உறுதியான மெலிந்த அலுமினியம் பேஸ்ஸில்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபாட் மாடல்கள் 10' இன்ச் டிஸ்பிளேயுடன் விற்பனைக்குக் களமிறங்க தயாராகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

3டி கேமரா
சோனி நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை 3டி கேமராக்களை தனது ஐபோன் ப்ரோ மாடலுக்காக உருவாக்கி வருகிறது. ஐபோன் ப்ரோ போன்கள் 3டி லேசர் சென்சார்களுடன் 2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமென்றும் தெரியவந்துள்ளது.

iOS 13
ஆப்பிள் நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யவுள்ள ஐபோன்களில் iOS 13 இயக்கத்துடன் வெளியிட அந்நிறுவனம் மும்முரமாக உழைத்து வருகிறது. இந்த நிலையில் iOS 13 இயங்குதளத்துடன் கூடிய ஐபோன்கள் வரும் ஆண்டில் வெளியிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications