இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்!
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேறப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

புதிய ஒஎஸ் 6.0 அப்டேட்
அதன்படி புதிய ஒஎஸ் 6.0 அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து வாட்ச் அறிமுகங்களுக்கும் அமல்படுத்துகிறது. இதன் மூலம் பயனர்கள் வாயஸ் மெமோ, மாதவிடாய் நாட்கள் ட்ராக்கிங், வாட்சிலேயே ஆப்ஸ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் நாய்ஸ் என்னும் புதிய ரக செயலிகளை பயனாளர்கள் அப்டேட் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டிஃபிகேஷன்
மேலும் இந்த புதிய அப்டேட் மூலம் இந்தியாவுக்கென விடுபட்டுப் போயிருந்த புதிய அம்சமங் தற்சமயம் கிடைத்துள்ளது. ஒஎஸ் 6.0 அப்டேட் பொதுவாக அனைத்து ஆப்பிள் ரக வாட்ச் மூலமாகவும் இதயத்துடிப்பை அறிவிக்கும் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பயன்படுத்தும் பயனாளர்கள் இனிமேல் வாட்ச் மூலமாகவே ஈசிஜி பதிவுகளைப் பெறமுடியும். மேலும் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அத்தனை அம்சங்களையும் அப்டேட்களையும் தாங்கிக்கொண்டே புதிய ஆப்பிள் வாட்ஸ் சீரிஸ் 5 இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

அதன்படி சீரிஸ் 4 மற்றும் 5 வாட்ச்களின் மிகவும் சிறப்பான அம்சம் இந்த ஈசிஜி பதிவுதான், இதன் மூலம் இருதயபிரச்சனைகளை முன்னரே அறிந்துகொண்டு தகுந்த சிகிச்சை எடுக்க முடியும்.

ஈசிஜி ரிப்போர்ட்
குறிப்பாக ஆப்பிள் சீரிஸ் 4 அல்லது 5 வைத்திருந்தால் அதிலுள்ள ஈசிஜி ஆப் மூலம் உங்கள் விரலை கொடுக்ப்பட்டிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். 30விநாடிக்குப் பின் விரலை எடுக்கும் போது உங்களது சோதனை முடிக்கப்பட்டு ஈசிஜி ரிப்போர்ட் திரையில் காண்பிக்கப்படும், பயனாளர்கள் இதை பிடிஎஃப் ஆக மாற்றி பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








