Home
Gadgets

வாடா கண்ணு.. மார்ச் மாதம் அறிமுகமாகும் பட்ஜெட் விலை MacBook.. iPhone சிப்பை கையில் எடுத்த Apple!

ஆப்பிள் (Apple) நிறுவனம் ஆனது நான்-பிரீமியம் லேப்டாப் பிரிவில் புதிய மேக்புக் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, குபெர்டினோவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம் கூறப்படும் பட்ஜெட் விலை மேக்புக் மாடலை வருகிற 2026 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தலாம்.

முன்னதாக, ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல்களை இயக்கும் அதே சிப்செட் உடன் புதிய பட்ஜெட் விலை மேக்புக் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி இருந்தது. அந்த தகவல் இந்த மேக்புக் உடன் ஒற்றுப்போகலாம்; அதாவது மார்ச்சில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படும் பட்ஜெட் விலை மேக்புக் ஆனது ஐபோன் 16 ப்ரோவில் உள்ள அதே சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

பட்ஜெட் விலை MacBook.. iPhone சிப்பை கையில் எடுத்த Apple!

மேலும் - நிச்சயமாக ஆப்பிள் நிறுவனம் வெறுமனே ஒரு மேக்புக் மாடலை மட்டுமே அறிமுகம் செய்ய வாய்ப்பில்லை. ஆக மேக்புக் உடன் சேர்த்து அதற்கு சமமான ஒரு டிவைஸையும் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம். ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் மாடல் ஆனது பிரகாசமான மற்றும் "பிளேபுல்" ஆன கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

வரவிருக்கும் புதிய மேக்புக் ஆனது $1,000 (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.90,700) என்கிற விலையில் விற்பனைக்கு வரும் என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - சந்தையில் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் மேக்புக் ஆக இது மாறும்.

விலைகளை குறைவாக வைத்திருக்க, ஆப்பிள் நிறுவனம் ஏ18 ப்ரோ சிப்செட்டை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது, இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் உள்ள அதே சிப்செட் ஆகும். கூடுதலாக, இது ஏர் மற்றும் ப்ரோ வகைகளுடன் ஒப்பிடும்போது 13 இன்ச்களை விட சற்று குறைவான, சற்று சிறிய டிஸ்பிளேவுடன் வரவும் வாய்ப்புள்ளது.

மேற்கண்ட எல்லா தகவல்களுமே புளூம்பெர்க்கின் மார்க் குர்மனிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளது. அவருடைய கூற்றுப்படி ஆப்பிள் அடுத்த மாதம் ஒரு நிகழ்வை நடத்த திட்டமிடுகிறது. அதில் புதிய மேக்புக் அறிமுகப்படுத்தப்படலாம். முன்னரே குறிப்பிட்டபடி இந்த புதிய மேக்புக்கிற்காக மட்டுமே ஆப்பிள் நிறுவனம் ஒரு மார்ச் நிகழ்வை நடத்துமா அல்லது வேறு ஏதேனும் வன்பொருளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆப்பிளின் லேட்டஸ்ட் மேக்புக் ஏர் எம்4 முக்கிய அம்சங்கள்: மேக்புக் ஏர் எம்4 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. இந்த ஆப்பிள் லேப்டாப்கள் 6கே ரெசல்யூஷனில் 2 எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை ஆதரிக்கும் (லேப்டாப் திறந்திருக்கும் போது) என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்4 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது. இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது.

மேக்புக் ஏர் எம்4 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும். மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் எம்4 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது. இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது.

சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் எம்4 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Reportedly To Launch Low Budget MacBook With A18 Pro Chip in March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X