Home
Gadgets

2026 தொடங்கியதுமே சிக்ஸர்.. புது பட்ஜெட் iPhone, மினி iPad.. Apple அறிமுகம் செய்யவுள்ள 5 தயாரிப்புகள்!

2026 ஆம் ஆண்டில் எளிதாக செயல்படுவதற்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனம் இன்னும் பரபரப்பான வெளியீட்டு சுழற்சிக்கு தயாராகி வருகிறது, குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில். குபெர்டினோவை தளமாக கொண்ட இந்த நிறுவனம் ஐபோன் 18 சீரீஸை சேர்க்காமலேயே மொத்தம் 5 தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. ஐபோன் 17இ (iPhone 17e): கடந்த ஆண்டு ஐபோன் 16இ மாடல் ஆனது ஐபோன் 16 சீரீஸின் மிகவும் மலிவு விலை மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17இ (iPhone 17e) உடன் அதன் இ-சீரீஸை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் iPhone, மினி iPad.. Apple-ன் 5 புது தயாரிப்புகள்!

இது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகப்படுத்தப்படலாம். இது ஆப்பிள் ஐபோன் 17 மாடலில் உள்ள புதிய ஆப்பிள் ஏ19 சிப்செட்டால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ஐபோன் 17இ மாடலில் புதிய 18 மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ்டு செல்பீ கேமராவும் இடம்பெறலாம்.

2. ஐபேட் மினி 8 (iPad Mini 8): ஓஎல்இடி டிஸ்பிளேக்கள் உடனான ஐபேட் சீரீஸை மேம்படுத்தும் பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபேட் பரோ (iPad Pro) மாடலுக்கு பிறகு, இந்த அப்டேட்டை பெறும் அடுத்த ஆப்பிள் தயாரிப்பு ஐபேட் மினி (iPad Mini) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் ஐபேட் 8 மினி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் அறிமுகப்படுத்தப்படலாம்.

இதன் டிஸ்பிளே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிற எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை இது ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலில் உள்ள ஆப்பிள் ஏ 19 ப்ரோ (A19 Pro) சிப்செட் மற்றும் நீர்-எதிர்ப்பு வடிவமைப்பு ஆகியவைகளை பெறலாம். இந்த மேம்பாடுகள் அடுத்த ஐபேட் மினியின் விலையை அதன் முந்தைய மாடலை விட சுமார் $100 (தோராயமாக ரூ.9,000) அதிகமாக உயர்த்தக்கூடும்.

3. ஐபேட் 12 (iPad 12): இது அடுத்த ஆண்டு ஐபேட் மினி 8 உடன் இணைந்து வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 12வது ஜெனரேஷன் ஐபேட் ஆனது ஐபோன் 17 மாடலில் இருந்து ஏ19 சிப்செட்டை பெறலாம், இது 11வது ஜெனரேஷன் ஐபேட் மாடலில் உள்ள ஏ16 சிப்புடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். விலை ஐபேட் 12 மாடலை (ரூ.34,900) போலவே இருக்கும்.

4. பட்ஜெட்-விலை மேக்புக் (Budget MacBook): செயல்திறன் மற்றும் பேட்டரி லைஃப் சமநிலையை பொறுத்தவரை, மேக்புக் மாடல்கள் அவற்றின் விலை வரம்பில் சிறந்தவைகளாக கருதப்படுகின்றன. இதுவரை ஆப்பிள் பட்ஜெட் பிசி பிரிவில் நுழைந்ததில்லை, இதனால் மாணவர்கள் அல்லது பட்ஜெட் குறைவாக உள்ளவர்கள் மேக்புக் வாங்குவது கடினமாக இருந்தது. 2026 இல் ​​விஷயங்கள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடத்த பல மாதங்களாக, ஆப்பிள் ஒரு புதிய மலிவு விலை மேக்புக்கில் பணியாற்றி வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இது ஐபோன் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். அது ஐபோன் 16 ப்ரோவிலில் இருக்கும் ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப் ஆக இருக்கலாம்.

ஐபோனின் சிப்செட் ஆக இருந்தாலும் கூட பட்ஜெட் மேக்புக்கில் இது நல்ல செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேக்புக் ஏர் மாடலில் உள்ள 13.6 இன்ச் பேனலை விட இதன் டிஸ்பிளே சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.54,000 ஆக இருக்கலாம்.

5. எம்5 மேக்புக் ஏர் (M5 MacBook Air): 2025 ஆண்டு அக்டோபரில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட மேக்புக் ப்ரோ (MacBook Pro) மற்றும் iஐபேட் ப்ரோ (Pad Pro) மாடல்களுடன் எம்5 சிப்செட்டை அறிமுகப்படுத்தியது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த சிப் - மேக்புக் ஏர் மாடலில் இடம்பெறலாம். இந்த புதிய சிப்செட் ஏர் மாடலில் - சிறந்த செயல்திறனையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது. 2027 ஆம் ஆண்டில் தான் மேக்புக் ஏர் மாடலில் ஓஎல்இடி டிஸ்பிளே சேர்க்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple new launches in early 2026 iPhone 17e iPad Mini 8 iPad 12 Budget MacBook M5 MacBook Air
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X