Home
Gadgets

யாரும் எதிர்பார்க்கல.. Apple-ன் 2 புது இன்புட் டிவைஸ்.. மேஜிக் கீபோர்ட்.. பென்சில் ப்ரோ.. என்ன விலை தெரியுமா?

ஆப்பிள் லெட்ஸ் லூஸ் ஈவென்ட் (Apple Lets Loose Event) நிகழ்வில் யாரும் எதிர்பார்க்காத இரண்டு புதிய இன்புட் சாதனங்கள் (Input device) வெளியிடப்பட்டுள்ளன. இதில் புதிய மேஜிக் கீபோர்ட் மற்றும் ஆப்பிள் பென்சில் ப்ரோ என்ற இரண்டு சாதனங்கள் அடங்கும்.

ஆப்பிள் நிறுவனம் மே 7, 2024 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7.30 மணி அளவில் அதன் புதிய ஓஎல்இடி ஐபாட் ப்ரோ (OLED iPad Pro) மற்றும் எம்2 ஐபாட் ஏர் (M2 iPad Air) என்ற புதிய டேப்லெட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. நீண்டகால எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்த இரண்டு சாதனங்களையும் ஆப்பிள் நிறுவனம் அதன் லெட்ஸ் லூஸ் ஈவென்ட் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

யாரும் எதிர்பார்க்கல.. Apple-ன் புது மேஜிக் கீபோர்ட்.. பென்சில் ப்ரோ..

ஆப்பிள் மேஜிக் கீபோர்ட் மற்றும் பென்சில் ப்ரோ அறிமுகம் (Apple Magic Keyboard and Pencil Pro Launch):

இந்த சாதனங்களுடன் யாரும் எதிர்பார்த்திடாத வகையில், ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இன்புட் டிவைஸ்களை (New Apple Input Device) அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு பிறகு, ஆப்பிள் நிறுவனம் புதிய கீபோர்ட் சாதனத்தை அதன் ஐபாட் (Apple iPad) சாதனத்திற்காக அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சாதனத்தை நிறுவனம் ஆப்பிள் மேஜிக் கீபோர்ட் (Apple Magic Keyboard) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை ஆப்பிள் நிறுவனம் இதன் முன்னோடி மாடல் கீபோர்டை விட மிகவும் மெலிதானதாக டிசைன் செய்துள்ளது. இதில் மூன்று மடிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் பிரத்தியேக டிசைனை பெற்றுள்ளது. இதன் மூலம் ஐபாட் சாதனம் ஃபிளாட்டிங்கில் இருப்பது போன்ற மேஜிக் லுக்கை பெறுகிறது.

இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இதை மேஜிக் கீபோர்ட் என்று பெயரிட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய மேஜிக் கீபோர்ட் சாதனத்தை ஒரு அலுமினியம் பால்ம்ரெஸ்ட் (palmrest) மற்றும் பெரிய டிராக்பேடுடன் (big size trackpad) லேசாக மேம்படுத்தப்பட்ட மேஜிக் கீபோர்டையும் ஹாப்டிக் மோட்டார் (Haptic motor vibration) அதிர்வுகளுடன் வழங்கியுள்ளது.

யாரும் எதிர்பார்க்கல.. Apple-ன் புது மேஜிக் கீபோர்ட்.. பென்சில் ப்ரோ..

மேஜிக் கீபோர்ட் விலை என்ன? பென்சில் ப்ரோ விலை என்ன? (Magic Keyboard Price and Pencil Pro Price):

இறுதியாக, இந்த முறை மேஜிக் கீபோர்ட் சாதனத்தில் புதிதாக ஃபன்க்ஷனல் கீஸ் (Functional keys) வரிசையையும் நிறுவனம் இந்த முறை வழங்கியுள்ளது. இந்த புதிய மேஜிக் கீபோர்ட் சாதனம் இரண்டு அளவுகளில் வருகிறது. இதில் ஒன்று 11" இன்ச் ப்ரோ மாடல் சந்தானத்திற்கு இணக்கமானது. மற்றொன்று, 13" இன்ச் மாடலுக்கு ஏற்றது. இவை பிளாக் மற்றும் சில்வர் என்று இரண்டு வண்ணங்களில்வருகிறது.

இவற்றின் விலை முறையே $299 மற்றும் $349 என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மேஜிக் கீபோர்ட்கள் இன்று முன்பதிவுக்கு கிடைக்கும். அடுத்த வாரம் ஷிப்பிங் செய்யப்படும். இத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பென்சில் ப்ரோ (Apple Pencil Pro) என்ற ஸ்டைலஸ் பென் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதுவும் ஹாப்டிக் மோட்டார் வைபிரேஷன் உடன் வருகிறது.

இந்த முறை ஆப்பிள் நிறுவனம் அதன் பென்சில் ப்ரோ சாதனத்தை கூடுதல் அம்சங்களுடன் வடிவமைத்துள்ளது. இதில் ப்ரெஸ்ஸர் பாயிண்ட் சென்சார், மேக்னெட்டிக் பென் ஹெட் ஃபிட்டிங், போன்று பல அம்சங்களை ஆதரிக்கிறது. இது பெயின்டிங் மற்றும் டிசைனிங் அனுபவத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இதன் விலை $129 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Magic Keyboard and Pencil Pro The 2 New Input Devices For iPad Pro Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X